காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் போட்டி?
சென்னை:
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில்போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி டெல்லியில் தீவிரமாகநடந்து வருகிறது.காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன்,ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்டதமிழக கோஷ்டித் தலைவர்கள் தங்களது விருப்ப பட்டியலை தமிழக காங்கிரஸ்பொறுப்பாளர் வீரப்ப மொய்லியிடம் கொடுத்து தங்களது ஆதரவாளர்களுக்கு சீட்கேட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சில முக்கிய பிரகர்களுக்கு தொகுதிகள் முடிவாகி விட்டதாகசெய்திகள் கசிந்துள்ளன.
அதன்படி, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில்போட்டியிடவுள்ளார்.
முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் தம்பியும், வர்த்தக காங்கிரஸ் தலைவருமானஎச்.வசந்தகுமார், சென்னை ஆர்.கே.நகரிலும்,
இளைஞர் காங்கிரஸ் தலைவரும், கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனுமானவிஷ்ணு பிரசாத் செய்யாறு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூரில் நிறுத்தப்படுகிறார். தொண்டாத்தூரில்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், வேலூரில் ஞானசேகரன், காட்டுமன்னார் கோவிலில்வள்ளல்பெருமான் நிறுத்தப்படுகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் யசோதாவே நிறுத்தப்படுகிறார்.












Click it and Unblock the Notifications