ஏப். 2ல் பாமக வேட்பாளர் பட்டியல்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 2ம் தேதி வெளியிடப்படும்எனத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில்போட்டியிடும் வேட்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் இறுதி செய்து விட்டார்.வரும் 2ம் தேதி திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பாமக பொதுக்குழுக்கூட்டம் கூடுகிறது.மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பாமக வேட்பாளர்களை அறிமுகம்செய்து வைக்கிறார் ராமதாஸ்.
ஏற்கனவே பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்டதுநினைவிருக்கலாம். வேட்பாளர் பட்டியல் வெளியான பின்னர், ராமதாஸின் தேர்தல்பிரசார சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications