கார்த்திக்குக்கு கெட்-அவுட் சொன்ன ஜெ!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கூட்டணி தொடர்பாக கார்த்திக்கையும் பிஸ்வாஸையும் அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியபோது அங்குசந்தானமும் திடீரென பிரசன்னமாகியுள்ளார். அத்துடன் கார்த்திக் தரப்பு கோபத்துடன் எழுந்து போயஸ்கார்டனை விட்டு வெளியில் வந்திருக்கிறது.

பார்வர்ட் பிளாக் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டிய ல வெளியிட்ட பின் அதன்அகில இந்திய பொதுச் செயலாளர் பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில்,

அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சியினர் அதிகம் விரும்பியதால் முதல்வர்ஜெயலலிதாவை கடந்த 11ம் தேதி நான், கார்த்திக் ஆகியோர் நேரில் சென்றுசந்தித்தோம்.

எங்களிடம் எங்களது கட்சியைப் பற்றிப் பேசாமல் சந்தானத்தைப் பற்றியே முதல்வர்பேசிக் கொண்டிருந்தார். இதை விட அதிர்ச்சியாக, நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், பக்கத்து அறையில் இருந்து சந்தானம் எங்களது அறைக்குவந்தார்.

நாங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டோம். இரண்டு கட்சிகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், மூன்றாவது நபர் உள்ளே வருவது என்பது எவ்வளவுஅநாகரீகமான செயல்?

இது எங்களை அவமதிக்கும் வகையில் இருந்தது. இதை நாங்கள் அதிர்ச்சியோடுபார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கார்த்திக்கை வெளியே போகுமாறுசொன்னார் ஜெயலலிதா.

இதையடுத்து வெளியில் வந்துவிட்டோம். இந்திய வரலாற்றிலேயே இப்படி ஒருசெயலை எந்தத் தலைவரும் செய்திருக்க மாட்டார்கள்.

இதைத் தொடர்ந்தே தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்தோம். பார்வர்ட்பிளாக் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டோம்.

முதல் கட்டமாக 15 வேடபாளர்களை அறிவித்துள்ளோம். புதுவையிலும் நாங்கள்தனித்தே போட்டியிடுவோம் என்றார் பிஸ்வாஸ்.

ஜெவை எதிர்த்து கார்த்திக் போட்டியில்லை:

பின்னர் கட்சியின் தமிழகத் தலைவர் கார்த்திக் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஆண்டிப்பட்டியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக என்னை பொது வேட்பாளராகநிறுத்தப் போவதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

ஒரு தலைவரை எதிர்த்து இன்னொரு தலைவரை நிறுத்துவது எனபது சரியானசெயலல்ல, அந்த அநாகரீக செயலுக்கு நான் துணை போக மாட்டேன்.

விஜயகாந்த்துடன் கூட்டணி வைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சும்நடத்தவில்லை. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் கார்த்திக்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+