அதிமுகவுக்கு ஓட்டு.. கேப்டனின் டங் ஸ்லிப்!

Subscribe to Oneindia Tamil

செஞ்சி:

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் பிரசாரம் செய்த நடிகர் விஜயகாந்த் வாய்தவறிப் போய் அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதால் தொண்டர்கள்குழப்பமடைந்தனர்.

செஞ்சியில் நடந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பிரசாரக் கூட்டத்தில் கட்சியின்தலைவர் விஜயகாந்த் பேசினார்.

இறுதியாக நன்றி கூறிய அவர் தொடர்ந்து பேசுகையில், எனவே, அனைவரும்தவறாமல் உங்களது வாக்குகளை அதிமுகவுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி முடித்தார்.

இதைக் கேட்டதும் கூட்டத்தினர் திகைத்து நன்றனர். என்ன இது, அண்ணன் தப்பாப்பேசுறாரே என்று அவர்கள் குழம்பிக் கொண்டிருக்கையில் சுதாரித்துக் கொண்டவிஜயகாந்த், நானே வாய் தவறி சொல்லி விட்டேன். உங்களது வாக்குகளை தேசியமுற்போக்கு திராவிட கழகத்திற்கு செலுத்துங்கள், நன்றி , வணக்கம் என்று கூறிவிடைபெற்றாார்.

கேப்டனின் மனசுக்குள்ளே இருக்கிறது வெளியே வந்துருச்சோ...

பிரியாணியை வீசியெறிந்த கேப்டன்:

இதற்கிடையே ஆற்காடு அருகே உள்ள மேல் விஷாரம் என்ற இடத்தில் விதியை மீறிஇரவு 10 மணிக்கு மேல் மைக் மூலம் பிரசாரம் செய்ததாக விஜய்காந்த் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளது உங்களுக்குத் தெரிந்ததே.

கிராமப் பகுதியில் 11 மணி வரைக்கும் பேசலாம்ணே என்று அப் பகுதி கட்சிநிர்வாகிகள் சொல்லியதை நம்பித்தான் விஜய்காந்த் அவ்வாறு விதிமீறல்பண்ணிவிட்டாராம்.

அடுத்த நாள் விஜய்காந்தை ஆம்பூர் ஸ்பெஷல் பிரியாணியுடன் அந்த நிர்வாகிகள்சந்தித்து போது, அதை வாங்கி அவர்கள் முகத்திலேயே வீசி கோபத்தைவெளிப்படுத்தியிருக்கிறார் கேப்டன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+