திமுக கூட்டணியிலிருந்து சேதுராமன் விலகல்!
சென்னை:
திமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு இடம் ஒதுக்கப்படாததால் அதிருப்திஅடைந்துள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கூட்டணியிலிருந்து விலக முடிவுசெய்துள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள குட்டிக் கட்சி மூவேந்தர் முன்னேற்றக் கழகம்.மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சேதுராமன்தலைமையிலான இந்தக் கட்சி, தேர்தலில் குறைந்தது 3 சீட்களையாவது எதிர்பார்த்தது.ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே தர முடியும். அதிலும் உதயசூரியன்சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக கூறிவிட்டது.
முதலில் யோசித்த சேதுராமன் பின்னர் சரியென்று ஒத்துக் கொண்டார்.
இதையடுத்து சிலரது பெயர்களை தேர்வு செய்து அதை திமுக தலைமையிடம்கொடுத்து அவர்களிலிருந்து ஒருவரை வேட்பாளராக போட திட்டமிட்டுள்ளதாகத்தெரிவித்தார் சேதுராமன்.
ஆனால் அதை ஏற்காத திமுக தலைமை, உங்கள் கட்சி சார்பில் நீங்கள் (டாக்டர்சேதுராமன்) போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே சீட் தருவோம் என்றுகூறிவிட்டது.
ஆனால், எம்பி தேர்தலில் மட்டுமே போட்டியிடுவதாக இருக்கும் சேதுராமன் இதைஏற்கவில்லை.
திட்டமிட்டு கட்சியை அழிக்க திமுக முயல்கிறது. இதை ஏற்க முடியாது என்றுகூறிவிட்டு திமுக கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துவிட்டார் சேதுராமன்.
அதிமுக கூட்டணியில் சேதுராமனைச் சேர்க்க மாட்டார்கள்.
இதனால் வேறு எதாவது கட்சியுடன் கூட்டு சேர மூவேந்தர் முன்னேற்றக் கழகம் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
முக்குலத்தோர் கட்சியான இது கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக்குடன் கூட்டணிஅமைக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications