நாளை விஜய்காந்த் கட்சி வேட்பாளர் பட்டியல்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முதல் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமைவெளியிடப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக, மதிமுக ஆகிய முக்கியக் கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலைவெளியிட்டு விட்டன. கார்த்திக்கும் முதல் பட்டியலை ரிலீஸ் செய்து விட்டார்.இந் நிநலையில் விஜயகாந்த் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் நாளைவெளியிடப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
பட்டியலை காலை 9.30 மணிக்கு, கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள கட்சியின்தலைமைக் கழக அலுவலகத்தில், கட்சித் தலைவர் விஜயகாந்த் வெளியிடுவார் எனஅக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக், பாஜகவுடன் விஜய்காந்தை கூட்டணி அமைக்க வைக்க ஒரு பக்கம்முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த முயற்சிகளை பாஜகவேமேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications