"போதை டாக்டரால் குழந்தை பலி?
திருவண்ணாமலை:
குடிபோதையில் டாக்டர் சிகிச்சையளித்தால் 5 மாத குழந்தை இறந்ததாக கூறிகுழந்தையின் தாய் உறவினர்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தைமுற்றுகையிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோரி மேட்டுத்தெருவை சேர்ந்த தம்பதிகள்சேகர்-கவிதா (22). இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 மாத குழந்தை இருந்தது.நேற்று முன்தினம் குழந்தைக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள தனியார்மருத்துவமனைக்கு குழந்தையை கவிதா தூக்கி சென்றார்.
அங்கு டாக்டர் சிகிச்சையளித்து ஊசி போட்டவுடன் குழந்தை மயங்கி விழுந்ததாககூறப்படுகிறது. இதையடுத்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கவிதாஎடுத்துச்சென்றார். ஆனால் அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள்தெரிவித்தனர்.
தனியார் டாக்டர் குடிபோதையில் ஊசிபோட்டதால் தான் குழந்தை இறந்ததாக கவிதாகூறுகிறார். குழந்தை இறந்ததைகூறி கவிதா, தனியார் டாக்டரிடம் தகராறு செய்தார்.
இது பற்றி செங்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த போதும், போலீசார் புகாரைபதிவு செய்யாமல் கவிதாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கவிதாவும், அவரது உறவிர்களும் நேற்று திருவண்ணாமலை கலெக்டர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கலெக்டர் சம்யபிரத சாஹூவியிடம் குழந்தையின் சடலத்தை காட்டி, தனியார் டாக்டர்மீதும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவிதா மனு கொடுத்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாககூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications