சு.சுவாமி கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு: மைலாப்பூரில் சந்திரலேகா போட்டி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை:

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதாக் கட்சிசார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைமையில் 9 கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.இக் கூட்டணியில் பாஜக 183 தொகுதிகளிலும் மீதம் உள்ள 51 தொகுதிகளில்கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன.

இதில் ஜனதாக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளுக்கானவேட்பாளர்களை கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சிவகங்கையில்செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதன் விவரம்:

மதுரை மத்தி - சசிகுமார்

மேலூர் - புருஷோத்தமன்

மைலாப்பூர் - சந்திரலேகா

பெரம்பூர் (தனி) - விஸ்வநாதன் (மறைந்த தலைவர் கக்கனின் உறவினர்)

ஓமலூர் - சுந்தரராஜன்

பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், தமிழ்நாடுபூராவும் போய் பிரசாரம் செய்யவுள்ளேன். இப்போது அரசியலில் சினிமா கலாச்சாரம்பரவி விட்டது.

அந்த அலைதான் இப்போது வீசி வருகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போதுஇதை மாற்றி இந்து அலையை பரவ விடுவோம்.

விஜயகாந்த் பெரும் குழப்பத்தில் இருக்கிறார் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது.அவர் தேசியம் என்று பேசுகிறார், ஆனால் கட்சியின் பெயரில் திராவிடம் வருகிறது.பெரும் குழப்பமாக இருக்கிறது.

கலர் டிவி தரப் போகிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். இவர் என்ன மன்னரா? கலர்டிவி தருவதற்கு? 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்பதும் டூப். அதெல்லாம் கொடுக்கமுடியாது என்றார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+