கருணாநிதிதான் அந்த அமிர்தவதி: வைகோ

Subscribe to Oneindia Tamil

உடுமலைப்பேட்டை:

ஆபாசமான அமிர்தவதி கதையைக் கூறிய திமுக தலைவர் கருணாநிதிதான், தனதுமகனுக்கு முடி சூட்டுவதற்காக திமுக என்னும் மன்னனுக்கு விஷம் வைக்கும்அமிர்தவதியாக காட்சி தருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.

வைகோவின் சமீபத்திய பிரசாரப் பேச்சுக்களை விமர்சிக்கும் வகையில் யசோதரகாவியம் என்ற இலக்கியத்திலிருந்து ஒரு கதையைக் கூறி திமுக தலைவர் கருணாநிதிவைகோவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இதற்கு வைகோ பதிலடிகொடுத்துள்ளார்.

உடுமலைப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் சண்கவேலுவை ஆதரித்து அவர்பிரசாரம் செய்து பேசும்போது,

என்னைப் பற்றி எந்த சொற்பொழிவாளரும் திட்டக் கூடாது, விமர்சிக்கக் கூடாதுஎன்று அண்ணன் கலைஞர் தனது கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவரேஎன்னை இப்போது திட்டி எழுதி வருகிறார். இன்றைக்குக் கூட ஒரு ஆபாச கதையைஎழுதியிருக்கிறார்.

அமிர்தவதின்னு ஒரு கதையை கூறியுள்ளார். அவரிடம் யசோதர காவியம் என்றகதையை அவருடைய நண்பர் சொன்னாராம், அந்தக் கதையில் ஆபாசமாக சொல்லிஇருக்கிறார். இங்கே ஏராளமான சகோதரிகள் இருப்பதால் நான் அதைப் பேசவிரும்பவில்லை.

நான் ஆவேசமாக பேசுவேன், ஆனால் ஆபாசமாக பேசத் தெரியாது.

யசோதர காவியம் ஒரு வட மொழிக் காவியம். கலைஞரைக் கேட்கிறேன், யசோதரகாவியத்தின் செகன்ட் பார்ட்டை விட்டு விட்டீர்களே? பாதி எழுதி விட்டு மீதியைவிட்டு விட்டீர்களே?

அதை நான் சொல்கிறேன். நீங்கள் சொன்ன கதையில் வரும் அமிர்தவதி,மன்னனையே விஷம் வைத்துக் கொன்று விட்டு, தனது மாமியாரையும் விஷம்வைத்துக் கொன்றாள். ஏன் தெரியுமா?

மகனுக்கு புத்தி கிடையாதுன்னு மகனுக்கு முடி சூட்டவோ, பட்டம் சூட்டவோ மன்னன்விரும்பவில்லை. மன்னன் நல்லவன், தன்னுடைய மகனை மன்னனாக்க அவன்விரும்பவில்லை. அதனால் இந்த மனைவி புருஷனை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு ... அதுவரைக்கும் எழுதியிருக்கிறார்.

மனைவி தனது மகனை மன்னனாக்கினாள். இதுதான் யசோதர காவியத்தின் அடுத்தகதை. அவனை மன்னனாக்கி அவள் வீணாகப் போனாள். அது வேறு விஷயம்.

நான் இப்போது குற்றஞ் சாட்டுகிறேன். அமிர்தவதின்னு சொல்லி, நீங்கள் ஒருபக்கத்துக்கு அழகாக எழுதி விட்டீர்கள். செந்தமிழில் எழுதி விட்டீர்கள். இப்போதுநான் நேரடியாக கேட்கிறேன்.

திமுகதான் அந்த மன்னன், அண்ணா உருவாக்கிய அந்த இயக்கம்தான் மன்னன்.

அந்த மன்னன் விரும்பாத காரியத்தை, திமுகவில் நீங்கள் திணிக்கிறீர்கள். திமுக என்றஉயிரை சாகடித்து விட்டு உங்களது மகனுக்கு முடி சூட்டுவதற்காக அமிர்தவதியாகநீங்கள் காட்சி அளிக்கிறீர்கள் என்றார் வைகோ.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+