விஜய்காந்த் எல்லாம் ஜூஜூபி-அதிமுக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்:
அம்மாவை எதிர்த்து பாலிவுட், பாலிவுட் நடிகர்களை நிறுத்தினால் கூட இருக்கும் சுவடே இல்லாமல் காணாமல்போவார்கள் என விருதாச்சலத்தில் நடிகர் விஜய்காந்தை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்பொன்னேரி காசிநாதன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,அம்மாவின் ஆசியுடனும் ஆசிர்வாதத்துடன் களத்தில் நிற்கிறேன். சினிமா நடிகர் என்ற தகுதியை மட்டும்வைத்துக் கொண்டு விஜய்காந்த் இங்கு போட்டியிடுகிறார். இதனால் அதிமுகவுக்கு துளியும் பாதிப்பில்லை.
அம்மாவை எதிர்த்து பாலிவுட், பாலிவுட் நடிகர்களை நிறுத்தினால் கூட இருக்கும் சுவடே இல்லாமல் காணாமல்போவார்கள். இந்த விஜய்காந்த் எல்லாம் எம்மாத்திரம். சும்மா ஜூஜூபி.
அம்மாவின் 5 வருட சாதனைகளைச் சொன்னாலே போதும், என் வெற்றி உறுதி என்றார் காசி ரொம்பநம்பிக்கையுடன்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications