சென்னையில் இன்று திமுக கூட்டணி பிரசார கூட்டம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சிகளின்தலைவர்கள் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டம் சென்னையில் இன்று மாலைநடைபெறுகிறது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரசாரப் பொதுக்கூட்டம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ள இக்கூட்டம் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெறுகிறது.இக் கூட்டத்தில் கருணாநிதி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் தலைவர்எம்.கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் தா.பாண்டியன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், முன்னாள்அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட தலைவர்கள் பேசவுள்ளனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கலர் டிவி திட்டம் பெரும்சர்ச்சையை எழுப்பியுள்ளது குறித்து இக்கூட்டத்தில் தான் விரிவாக விளக்கிக் கூறப்போவதாக ஏற்கனவே கருணாநிதி அறிவித்துள்ளதால் இக்கூட்டம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று மாலை கருணாநிதியை மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் 13 பேருடன்சந்தித்தார் அக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன்.
அப்போது அந்த வேட்பாளர்களிடம் தேர்தல் வியூகம் குறித்து கருணாநிதி பேசினார்.
INDIA NEWS |