சதுர்வேதியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
சதுர்வேதி சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்குசென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும், பழனிச்சாமி என்பவருக்கும்இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது. இதைத் தீர்த்து வைக்கக் கோரி ஈரோடுதொழிலதிபர் சதுர்வேதியை அணுகினார்.அப்போது பிரச்சினையைத் தீர்த்து வைக்க ரூ. 30 லட்சம் கோரினாராம் சதுர்வேதி.அதைத் தர தொழிலதிபர் மறுத்ததால் அவரைக் கொலை செய்து விடுவதாகமிரட்டியுள்ளார்.
இதையடுத்து ஈரோடு தொழிலதிபர் சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்சதுர்வேதி மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சதுர்வேதி ஆஜராகவில்லை. மாறாகஅவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சதுர்வேதி மும்பையில் இருப்பதால் அவரால்வர முடியவில்லை.
நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரினார்.இதை நிராகரித்த நீதிபதி செல்வக்குமார், சதுர்வேதியை கைது செய்து வருகிற 21ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கூறி ஜாமீனில் வெளி வர மடியாதபிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டார்.
ஏற்கனவே சென்னை தொழிலதிபர் சுரேஷின் மனைவி, மகளைக் கடத்தி இருவரையும் கற்பழித்தது உள்ளிட்ட பல்வேறுவழக்குகளில் ஏற்கனவே சதுர்வேதி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications