சிபிஐ வேட்பாளர் பட்டியல்: 8 புதுமுகங்கள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் முதலில் தொகுதிப் பங்கீடு மற்றும்ஒதுக்கீடு முடிந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட். தற்போது அந்தக் கட்சி தான்கூட்டணியிலேயே கடைசியாக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.திருச்சியில் இன்று நடந்த கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின் வேட்பாளர்பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் விவரம்:திருத்துறைப்பூண்டி - உலகநாதன்
நன்னிலம் - பத்மாவதி
மன்னார்குடி - சிவபுண்ணியம்
கோவில்பட்டி - ராஜேந்திரன்
அவிநாசி (தனி) - ஆறுமுகம்
ஆலங்குடி - ராஜசேகரன்
தளி - நாகராஜன்
பெருந்துறை - பெரியசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் - ராமசாமி
சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த பழனிச்சாமிக்கு இந்தமுறை சீட் மறுக்கப்பட்டுள்ளது. இவர் அதிமுக சார்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், தற்போதைய எம்.எல்.ஏக்களில் கோவில்பட்டி ராஜேந்திரன்,மன்னார்குடி சிவபுண்ணியம் ஆகியோர் மட்டுமே மீண்டும் போட்டியிடுகிறார்கள்.மற்ற அனைவரும் புதுகங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications