ஆண்டிப்பட்டியில் ஜெ.வை எதிர்த்து கார்த்திக்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட கட்சித் தலைமையும், கட்சியும்என்னைக் கேட்டுக் கொண்டுள்ளன. அதை ஏற்பதா, இல்லையா என்பது குறித்துவிரைவில் முடிவை அறிவிப்பேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும் முன்பு, அதிமுகவில் சேரவிண்ணப்பம் அளித்து காத்திருந்தவர் கார்த்திக். ஆனால் ஜெயலலிதா அவரைக் கண்டுகொள்ளாததால், கடுப்பாகிப் போய் ரசிகர் மன்றங்களை வைத்து சரணாலயம் என்றஅமைப்பைத் தொடங்கினார்.

இதை அரசியல் கட்சியாக மாற்றப் போவதாக செய்திகள் வெளியானபோது அதைகார்த்திக் மறுக்கவில்லை.

ஆனால் புதிய கட்சிக்குப் பதிலாக ஏற்கனவே பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கும்பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரானார் கார்த்திக்.

கார்த்திக் வரவை விரும்பாத கட்சியின் பொதுச் செயலாளர் சந்தானம் கட்சியை விட்டுநீக்கப்பட்டார். அதிமுகவுடன் கூட்டணி வைக்க கார்த்திக் முயன்றும் அதைஜெயலலிதா ஏற்கவில்லை.

சந்தானத்தையும் கட்சியில் சேர்த்தால் தான் கூட்டணி என்று கண்டிசன்போடப்பட்டதால் அதிமுகவிடம் இருந்து ஒதுங்கிவிட்டார்.

இதையடுத்து கார்த்திக்கை போயஸ் கார்டனுக்கே வரவழைத்து, சந்தானம் விஷயத்தில்பேசி, இறுதியாக கெட்-அவுட் சொல்லி கார்த்திக்கை கேவலப்படுத்தி அனுப்பினார்ஜெயலலிதா.

இந்த அவமானத்தால் வெறுப்படைந்த கார்த்திக் 111 தொகுதிகளில் தனித்துப் போட்டிஎன்று அதிரடியாக அறிவித்தார். தொடர்ந்து 3 கட்டமாக வேட்பாளர் பட்டியலையும்வெளியிட்டார்.

இதையடுத்து கார்த்திக்குக்கு மிரட்டல்கள் விடுக்க ஆரம்பித்தது அதிமுக. அவருக்குஆதரவாக இருந்த ஒரு மூத்த முக்குலத்தோர் சமூகத் தலைவரை உளவுப் பிரிவினர்ஜீப்பில் கட்டாயப்படுத்தி ஏற்றிச் சென்று மிரட்டி அனுப்பி வைத்தனர்.

இந் நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக்,

என்னை தமிழகத்தின் முக்கியத் தொகுதி ஒன்றில் நிற்கக் கூறி கட்சித் தலைமைஉத்தரவிட்டுள்ளது. கட்சியினரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அந்தத் தொகுதிஆண்டிப்பட்டி.

கட்சியினர் மிகவும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் முடிவை நானே எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்பதா,இல்லையா என்பது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஏற்றாலும்ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விரைவில் முடிவை அறிவிப்பேன்.

பார்வர்ட் பிளாக் கட்சி வேட்பாளர்களை மிரட்டும் முயற்சியில் அதிமுகவினர்தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த சவாலை நாங்கள் சந்திப்போம் என்றார் கார்த்திக்.

முக்குலத்தோர் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள், பெண்களிடையே கார்த்திக்குக்கு நல்ல வரவேற்பு உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவர் ஆண்டிப்பட்டியில் போட்டியிடப் போகிறார் என பத்திரிக்கையாளர்களிடையே பரபரப்பானசெய்தி பரவியது. அதை உறுதிப்படுத்த கார்த்திக்கை தொடர்பு கொண்டபோது, பத்திரிக்கையாளர்களை அழைத்துதனது நிலையை விளக்கினார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+