கேரளாவை கலக்க போகும் ஜெயா அம்மே!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தனது கேரள மாநில பிரசாரத்தில் முழுக்க முழுக்கமலையாளத்திலேயே பேசி அசத்தத் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள்வெளியாகியுள்ளன.

பல மொழிகள் அறிந்தவர் ஜெயலலிதா. பிறந்த ஊர் மைசூர் என்பதால் கன்னடம்,தமிழகத்தில் வளர்ந்ததால் தமிழ், திரைப்படங்களில் நடித்தபோது கிடைத்தஅனுபவத்தால் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளையும் கற்றார்.

அந்த அனுபவத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவார் ஜெயலலிதா. சட்டசபையில்பேசும்போது சில உறுப்பினர்கள் தெலுங்கில் கேள்விகள் கேட்டால் தெலுங்கிலேயேபதிலளித்து அசத்துவார் ஜெயலலிதா.

இதேபோல அவருக்கு இந்தி, கன்னடமும் நன்றாகத் தெரியும். ஆனால், திராவிடக்கட்சியின் தலைவர் என்பதால் டெல்லிக்குப் போனாலும் மறந்து போய் கூட இந்தியில்பேச மாட்டார்.

அதே போல மலையாளமும் ஓரளவு தெரியும். தற்போது தீவிர தேர்தல் பிரசாரத்தில்ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, கேரளாவிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். அங்கும்அதிமுக போட்டியிடுகிறது.

அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க கேரளாவில் பிரசாரம்செய்யவுள்ள ஜெயலலிதா, முழுக்க முழுக்க மலையாளத்திலேயே பேசதிட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா பேசுவதற்கு வசதியாக, கேரள மாநில பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு உரை தயாரிக்கப்பட்டுள்ளதாம். (அதுல பெரியாறு அணை விவகாரம்இருக்கா?)

இந்த உரையை தமிழில் எழுதி வைத்துக் கொண்டு மலையாளத்தில் பேச ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+