காங். பட்டியல் ரிலீஸ்; 18 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 18பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதற்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி டெல்லியில் கடந்த சிலநாட்களாக மும்முரமாக நடந்து வந்தது.

ஒவ்வொரு கோஷ்டித் தலைவருடனும் கட்சியின் வேட்பாளர் தேர்வுக் குழுஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது.

பின்னர் இந்தப் பட்டியல் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் கொடுக்கப்பட்டுஅவரது ஒப்புதல் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை கட்சிமேலிடம் வெளியிட்டது.

காங்கிரஸ் பட்டியல்:

ஆர்.கே.நகர் - ராயபுரம் மனோ.

மதுராந்தகம் - டாக்டர் காயத்ரி தேவி

ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா

பூந்தமல்லி - டி.சுதர்சனம்

பள்ளிப்பட்டு - டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன்

சோளிங்கர் - அருள் அன்பரசு

செங்கம் (தனி) - போளூர் வரதன்

போளூர் - பி.எஸ். விஜயகுமார்

வேலூர் - ஞானசேகரன்

செய்யாறு - டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத்

காட்டுமன்னார் கோவில் (தனி) - டாக்டர் வள்ளல் பெருமான்

ரிஷிவந்தியம் - சிவராஜ்

ஓசூர் -கே.கோபிநாத்

சேலம் 1 - எம்.ஆர்.சுரேஷ்

ஆத்தூர் - எம்.ஆர்.சுந்தரம்

நாமக்கல் (தனி ) டாக்டர் கே.ஜெயக்குமார்

தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்

கோவை மேற்கு - மகேஸ்வரி

வால்பாறை (தனி) - கோவை தங்கம்

காங்கேயம் - விடியல் சேகர்

மொடக்குறிச்சி - ஆர்.எம்.பழனிச்சாமி

ஊட்டி - பி.கோபால்

தேனி - டாக்டர் என்.டி.ஆர். ராஜ்குமார்

நிலக்கோட்டை (தனி) - கே.செந்தில்வேல்

மதுரை மேற்கு - ஆர்.எம்.பெருமாள்

மேலூர் - ரவிச்சந்திரன்

வேடசந்தூர் - தண்டபாணி

தொட்டியம் - பி.சி.செல்வராஜ்

அரியலூர் - பாளை டி.அமரமூர்த்தி

ஸ்ரீரங்கம் - ஜெரோமா ஆரோக்கியராஜ்

மயிலாடுதுறை - எஸ்.ராஜ்குமார்

பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்

பேராவூரணி - எஸ்.சி.திருஞானசம்பந்தம் பாபநாசம் - ராம்குமார்

திருமயம் - சுப்புராம்

காரைக்குடி - சுந்தரன்

திருவாடானை - கே.ஆர்.ராமசாமி

மானாமதுரை (தனி) - கே.பாரமலை

பரமக்குடி (தனி) - கே.வி.ஆர்.ராம் பிரபு

ராமநாதபுரம் - கே.ஹசன் அலி

விருதுநகர் - தாமோதரன்

கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ்

சேரன்மாதேவி - வேல்துரை

நாங்குநேரி - எச்.வசந்தகுமார்

சாத்தான்குளம் - ராணி வெங்கடேசன்

ஸ்ரீவைகுண்டம் - எஸ்.டி.ஆர். விஜயசீலன்

குளச்சல் - ஜெயபால்

கிள்ளியூர் - ஜான் ஜேக்கப்

தற்போதைய எம்.எல்.ஏக்களில் 18 பேருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளது. சட்டசபைமுன்னாள் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனுக்கு மீண்டும் சீட்கிடைக்கவில்லை. விபத்தில் படுகாயமடைந்து அவர் தொடர்ந்து உடல் நலமில்லாமல்உள்ளார்.

வேட்பாளர் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழகத்தில் பிரசாரம்செய்வதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+