தேர்தல் பிரசாரம்: மாயாவதி தமிழகம் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களைஆதரித்துப் பிரசாரம் செய்ய அக்கட்சியின் தலைவரும், முன்னாள்உ.பி.முதல்வருமான மாயாவதி தமிழகம் வருகிறார்.
பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் யாருடனும் கூட்டணி சேர முடியாமல் தனித்துப்போட்டியிடுகிறது. அக்கட்சியின் 55 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலைபகுஜன் சமாஜ் கட்சி வெளியிட்டுள்ளது.பட்டியலை வெளியிட்ட பின்னர் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ்மானே செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாயாவதி ஐந்துநாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். புதுவையில் ஒரு நாள் பிரசாரம்மேற்கொள்கிறார்.
இரு மாநிலங்களிலும் மொத்தம் 11 பொதுக் கூட்டங்களில் மாயாவதி பேசி வாக்குசேகரிப்பார் என்று தெரிவித்தார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications