மூமுக வேட்பாளர்கள்: சேதுராமன் போட்டியில்லை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பாஜக கூட்டணியில் சேர்ந்துள்ள டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக்கழகத்தின் ஐந்து வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. சேதுராமன்தேர்தலில் போட்டியிடவில்லை.

திமுக கூட்டணியில் சேதுராமன் தான் நிற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒரு சீட்ஒதுக்கப்பட்டது. ஆனால், என்னை ராஜ்யசபா எம்பி ஆக்குங்கள், நான் என்கட்சிக்காரரை எம்எல்ஏ தேர்தலில் நிறுத்துகிறேன், திருமங்கலம் தொகுதி கொடுங்கள்என்றார் சேது.

ஆனால், அவருக்கு ஸாரி சொல்லிவிட்டது திமுக.

இதையடுத்து அதிமுக கூட்டணியில் சேர முயன்றார். அங்கும் அவரைசேர்க்கவில்லை.

இதையடுத்து எல்லோரையும் சேர்த்துக் கொள்ளும் பாஜக தலைமையிலானகூட்டணியில் இணைந்தார் சேதுராமன்.

அங்கு அவருக்கு 5 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது.

அத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை சேதுராமன்அறிவித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல்:

மதுரை மேற்கு - திருப்பதி

போடி - சுப்ரமணியம்

திருமங்கலம் - ஒச்சாத்தேவர்

கடையநல்லூர் - சண்முகவேல்

ஆத்தூர் - குமாரவேல்

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் சேதுராமன் கூறுகையில்,

2001 சட்டசபைத் தேர்தலில் மட்டுமின்றி, உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத்தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தோம்.

ஆனால் எங்களை திமுக தலைவர் கருணாநிதி நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்.இதனால்தான் கூட்டணியிலிருந்து வெளியேறினோம் என்றார்.

முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த சேதுராமன் மதுரையில் மீனாட்சி மிஷன்மருத்துவமனை, தமிழகத்தில் பல இடங்களில் மீனாட்சி பவன் ஹோட்டல்களைநடத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+