சூடு பிடிக்கிறது தேர்தல் பிரச்சாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்திற்குத்தயாராகி வருகிறார்கள். திமுக தலைவர் கருணாநிதி 9ம் தேதி தல்தனது வட மாவட்டசுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார்.

முதல்வர் ஜெயலலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், அதிமுககூட்டணியின் பிரசாரத்தை ஆரம்பித்து, படு சூடாகவும், வேகமாகவும் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இருவரிலும் வைகோவின் பிரசாரம்தான் படு அனலாக இருக்கிறது. திமுகவைதனிப்பட்ட றையில் கடுமையாக விமர்சித்து வைகோ பிரசாரம் செய்து வருகிறார்.ஜெயலலிதா, தனது அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பிரசாரம்மேற்கொண்டுள்ளார்.

இந் நிலையில் திமுக கூட்டணியின் தேர்தல் பிரசாரமும் முழு வீச்சில் தொடங்குகிறது.முதல் கட்டமாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் தனது பிரசாரத்தைதான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதியில் நேற்று இரவு ஆரம்பித்தார்.

திரளாக கூடிய தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின், தயாநிதி மாறன், கூட்டணிக்கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி தனது பிரசாரத்தை 9ம் தேதி முதல்தொடங்குகிறார். வருகிற 24ம் தேதி வரை அவர் வடக்கு மற்றும் மேற்குமாவட்டங்களில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் மட்டும் முதல் கட்டப் பிரசாரத்தில் 6நாட்களை செலவிடவுள்ளார்.

ஏப்ரல் 11ம் தேதி மயிலாப்பூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். 17ம் தேதிசேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவைத் தாக்கல்செய்கிறார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை முதல் தனது பிரசாரத்தைத்தொடங்கியுள்ளார். திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில்அவர் பிரசாரம் மேற்கொண்டார்.

பாமக போட்டியிடும் தொகுதிகளிலேயே பெரும்பாலும் ராமதாஸ் பிரசாரம்மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல காங்கிரஸ் தரப்பிலும் பிரசார சுற்றுப்பயணத்திற்கான திட்டங்கள்வகுக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திஆகியோர் தமிழகம் வரவுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் அகில இந்தியத்தலைவர்கள் வருகை தரவுள்ளனர்.

தனி அணியாக போட்டியிடும் பாஜக சார்பில் ஓட்டு வேட்டையாட முன்னாள் பிரதமர்வாஜ்பாய், தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் வருகை தரவுள்ளதாகஅக்கட்சி ஏற்கனவே தெரிவித்துள்ளது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+