சிங்கி ஆன சிங்-தேர்தல் அட்டை கலாட்டா
சேலம்:
சேலத்தில் தனசிங் என்ற வாலிபரின் பெயரும், பாலினமும் பெண்ணாக காட்டப்பட்டுவாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலையொட்டி வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள்வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணியில் ஏகப்பட்ட குழப்பங்கள்இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.தவறான முகவரி, தவறான பெயர், வேறு ஒருவரின் புகைப்படம் என புகார்கள்குவிந்தபடி இருக்கிறது.
சேலம் மாவட்டம் காலராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசிங் என்ற 19 வயதுவாலிபருக்கு நூதன பிரச்சினை ஏற்பட்டுளளது.
சுத்த ஆம்பளையான இவரது பெயர் தனசிங்கி என்று அடையாள அட்டையில்அச்சிடப்பட்டுள்ளது. அத்தோடு, அவரை பெண் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தனைக்கும் பெயர், பாலினத்திற்கு அருகிலேயே இவரது புகைப்படமும்மீசையோடு இருக்கிறது என்பதுதான் பெரிய வேடிக்கை!.
இப்படிப்பட்ட குழப்பமான அட்டையை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்டஅதிகாரிகளைப் போய்ப் பார்த்து முறையிட்டுள்ளார் தனசிங். ஆனால் இதுவரைக்கும்அவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
ஆண்கள் பெண்களாவதும், இளைஞர்கள் தாத்தாவாதும், கணவன், மனைவிபெயர்கள் மாறுவதும், வயது தப்பாக போவதும் புகைப்பட அடையாள அட்டைகளில்சகஜமாகிவிட்டது.
ஆனால் தனசிங் விவகாரத்தில் இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications