கார்த்திக்குக்கு சிங்கம் சின்னம்: எதிர்த்து வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கக்கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம், பார்வர்ட் பிளாக் கட்சி, கார்த்திக்ஆகியோருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளராக இருந்த சந்தானம் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.இருப்பினும் இதற்கு மதுரை நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார் சந்தானம்.

இதைத் தொடர்ந்து அவர் தலைமையிலான கட்சிக்கு அதிமுக கூட்டணியில்சோழவந்தான் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு சந்தானம் போட்டியிடுகிறார்.

தனது தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிதான் உண்மையான பார்வர்ட் பிளாக்.எனவே எனது கட்சியே சிங்கம் சின்னத்தின் கீழ் போட்டியிடும் என சந்தானம் கூறிவந்தார்.

ஆனால் இதை கார்த்திக் ஏற்கவில்லை. எனது தலைமையிலான கட்சிதான்உண்மையான பார்வர்ட் பிளாக், எனது கட்சி வேட்பாளர்கள் சிங்கம் சின்னத்தின்கீழ்தான் போட்டியிடுவர்கள். சிங்கத்தை உரிமை கோர சந்தானத்திற்கு அதிகாரம்இல்லை என்று அவர் கூறுகிறார்.

இந் நிலையில் கார்த்திக் தலைமையிலான கட்சிக்கு சிங்கம் சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று கோரி சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த மெய்யப்பன் என்பவர்உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய கட்சி பார்வர்ட் பிளாக். இதை தமிழகத்தில்காலஞ்சென்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையேற்று திறம்பட நடத்திவந்தார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய கமிட்டி டெல்லியில் உள்ளது. இதுஅங்கீகரிக்கப்பட்ட கட்சியாகும். தேர்தல் சமயத்தில், மேற்கு வங்க மாநிலத்தில்மட்டும் சிங்கம் சின்னம் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. பிற மாநிலங்களில் இதுதேர்தல் சின்னமாக ஒதுக்கப்படவில்லை.

தமிழகத்தில் இக்கட்சி சந்தானம் எம்.எல்.ஏ. தலைமையில் இயங்கி வருகிறது. இதில்மாநிலக் கமிட்டியில் 55 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 44 பேர் சந்தானத்தின்தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

நடிகர் கார்த்திக் சினிமாவில் வாய்ப்பிழந்த நிலையில், அவரை எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பார்வர்ட் பிளாக் கட்சியில் ஒதுங்கினார். தான்தான் தலைவர்என்று கூறிக் கொண்டு வருகிறார். கட்சியில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

ஓராண்டு உறுப்பினராக இருப்பவர்கள்தான் கட்சியின் செயல் உறுப்பினராக மாறமுடியும். ஆனால் கார்த்திக் தற்போது செயல் உறுப்பினர் இல்லை. அந் நிலையில்அவர் தலைவாரக பொறுப்பேற்க சட்டப்படி முடியாது.

மாநில கமிட்டி பரிந்துரைக்கும் நபரைத்தான் மத்திய கமிட்டி அங்கீகரித்து தலைவராகநியமிக்க முடியும். ஆனால் இந்த மரபுகள், விதிகள் கடைப்பிடிக்கபபடாமல் கார்த்திக்தலைவராகியுள்ளார்.

எனவே கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சிக்கு சிங்கம் சின்னம் ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மெய்யப்பன்தனது மனுவில் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட திட்டமிட்டுள்ள கார்த்திக்குக்குபார்வர்ட் பிளாக்கின் சிங்கம் சின்னம் இருந்தால் மிகப் பெரிய பலமாக இருக்கும்என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த வழக்குப் பதிவாகியுள்ளது. இந்த மனு நீதிபதி இப்ராகிம்கலிபுல்லா முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதி கலிபுல்லா, இது தொடர்பாக வருகிற திங்கள்கிழமைக்குள்விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம், பார்வர்ட் பிளாக் கட்சி, கார்த்திக்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.மேலும் 2 வேட்பாளர்கள் அறிவிப்புஇந் நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் மேலும் 2தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கார்த்திக்வெளியிட்டுள்ளார்.

இதுவரை 63 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கார்த்திக் அறிவித்துள்ளார். இந்நிலையில் பட்டுக்கோட்டை, குன்னூர் (தனி) ஆகிய தொகுதிகளுக்கானவேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார்.

அதன் விவரம்:

பட்டுக்கோட்டை- சின்னசாமிநாதன்

குன்னூர்- ஆறுமுகம்

இதுதவிர புதுவையில் ராஜ்பவன் தொகுதியில் புஷ்பராஜ், புஸ்ஸி தொகுதியில்ரமேஷ், ரெட்டியார்பாளையம் தொகுதியல் கோகுல் என்ற சுந்தராரஜ் ஆகியோரையும்அறிவித்துள்ளார்.

ஆள் கிடைக்க கிடைக்க வேட்பாளர்களை அறிவிக்கிறார் போலிருக்கிறது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+