10 நாளில் எதிர்ப்பு அலை கிளம்பும்: ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

இன்னும் பத்து நாளில் அதிமுக அரசுக்கு எதிரான அலை வீசும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் இ.ஏ.பி.சிவாஜியை ஆதரித்து அவர் பிரசாரம்செய்தார். அவர் பேசுகையில்,

உங்களிடம் முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். வருகிற தேர்தலில் 234தொகுதிகளிலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றிபெறுவார்கள்.

நான்கு முறை நல்லாட்சி தந்த கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வராகப்பதவியேற்ற அருமையான ஆட்சியை வழங்குவார். அடுத்த ஐந்து ஆண்டுகளும்கலைஞரின் தலைமையின் கீழ் பொற்கால ஆட்சி அமையப் போகிறது.

தொடர்பான செய்திகள் அவரது ஆட்சி செய்த சாதனைகளை அவரே முறியடிப்பார், அவரால்மட்டும்தான் முறியடிக்க முடியும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா ஒரு நல்ல விஷயத்தையாவதுசெய்திருப்பாரா.?

எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதையெல்லாம் செய்தார். சமூகத்தில் அத்தனைபிரிவினரையும் வாட்டி வதைத்தார். செல்லும் இடமெல்லாம் ஆதரவு அலைஅடிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் மக்களிடம் உற்சாகம் இல்லை. நாங்கள் பிரச்சாரம் ஆரம்பித்து விட்டோம்.இன்னும் பத்தே நாளில் எதிர்ப்பு அலை கிளம்பும் என்றார் ராமதாஸ்.வைகோவுக்கு கண்டனம்:

பின்னர் ஆற்காடு வந்த ராமதாஸ் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார்நிறுவனமான சன் டிவி மீது தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் வைகோ. இதுதேர்தல் விதிறையை மீறிய செயலாகும். இந்தப் போக்கை அவர் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

புதுவைக்கான தொகுதிப் பங்கீடு விரைவில் நல்லபடியாக முடியும். அதுதொடர்பானபேச்சுக்கள் தொடங்கியுள்ளது.

தேர்தலை மனதில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சலுகைகளால்மக்கள் ஏமாந்து போய் விட மாட்டார்கள். வரும் தேர்தலில் அவருக்கு உரிய பதிலைஅளிப்பார்கள் என்றார்.

ராமதாசின் பிரசார திட்டம்:

ராமதாஸ் (ஏப்ரல் 6) வியாழக்கிழமை முதல் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார்.திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம்மேற்கொண்டார்.

இன்று (ஏப்ரல் 7) ஆற்காடு, அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம்செய்து வாக்கு சேகரிக்கிறார்.

8ம் தேதி திருப்பத்தூர், காவேரிப்பட்டணம்

9ம் தேதி பாலக்கோடு, தர்மபுரி

10ம் தேதி ஓமலூர், திருமங்கலம்

11ம் தேதி மேட்டூர், எடப்பாடி

12ம் தேதி கபிலர்மலை, பவானி

14ம் தேதி திண்டிவனம், வானூர்

15ம் தேதி மேல்மலையனூர், முகையூர்

16ம் தேதி பண்ருட்டி, விருத்தாச்சலம்

17ம் தேதி புவனகிரி, பூம்புகார்

18ம் தேதி திருவிடைமருதூர்

19ம் தேதி ஜெயம்கொண்டம், வரகூர்

21ம் தேதி கலசப்பாக்கம், பெரணமல்லூர்

22ம் தேதி செங்கல்பட்டு, திருப்போரூர்

23ம் தேதி சைதாப்பேட்டை, காஞ்சிபுரம்

ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். பாமக போட்டியிடும் தொகுதிகளிலேயேபெரும்பாலும் ராமதாஸ் பிரசாரம் மேற்கொள்கிறார்.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+