மிரட்டப்படும் கார்த்திக் கட்சி வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் வேட்பாளர்களுக்கு பல வகைகளிலும் மிரட்டல்கள்வந்தவண்ணம் உள்ளன. கார்ததிக் கட்சியின் சேடப்பட்டி தொகுதி வேட்பாளரை ஜீப்பை ஏற்றிக் கொல்ல முயற்சிநடந்துள்ளது.

கார்த்திக்கை முதலில் கெஞ்சியும் பின்னர் மிரட்டியும் பார்த்தது ஆளும் தரப்பு. இந்த வேலைகளுக்கு நடராஜனில்ஆரம்பித்து மதுரை ஆதீனம், அடாவடிக்குப் பேர் போன சினிமா பைனான்சியர் என பலரும்பயன்படுத்தப்பட்டனர்.

ஆனால், அதையும் மீறி தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டார் கார்த்திக். இந் நிலையில் ஆலங்குளம்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாமிநாதான் போட்டியிலிருந்து விலகுமாறுமிரட்டப்பட்டுள்ளார்.

அதே போல சேடப்பட்டி தொகுதியின் வேட்பாளர் ராமதுரை மீது ஜீப்பை விட்டு மோதி உயிருக்கு எச்சரிக்கைவிடுத்துவிட்டுச் சென்றுள்ளனர் சிலர். மேலும் மன்னார்குடியினருக்கு நெருக்கமான ஒரு அடாவடி பைனான்சியர்ஒருவர் கார்த்திக்கை ஒருமையில் அழைத்து மிரட்டியபடி உள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து கார்த்திக் கூறுகையில், நான் யாருக்கும் பயப்படப் போவதில்லை. எந்த மிரட்டல் வந்தாலும்சமாளிப்பேன். இனிமேல் என்ன மிரட்டல் வந்தாலும் அதை பகிரங்கமாக பத்திரிக்கைகளிலும் சொல்லிவிடுவேன்என்றார்.

இதற்கிடையே தனது கட்சியின் வேட்பாளர் மிரட்டப்படுவது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் தரவும் பார்வர்ட்பிளாக் தலைவர் பிஸ்வாஸ் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

இந் நிலையில் தமிழக டிஜிபிக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து வந்துள்ள உத்தரவில், அரசியல் கட்சியைசார்ந்தவரோ அல்லது சுயேச்சையோ யாராக இருந்தாலும் பாதுகாப்பு கேட்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும்தமிழக போலீஸ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+