ரயிலில் "கரண்ட் கட்: பயணிகள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கரண்ட் கட் ஆனதால் பயணிகள்தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 10மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.

ரெகுலர் பயணிகளும், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளும் தங்களுக்குஒதுக்கப்பட்ட இருக்கைகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

ரயில் புறப்படுவதற்கு முன் 5 பெட்டிகளில் திடிரென கரண்ட் கட் ஆனது. இந்த 5பெட்டிகளிலும் மின்சாரம் சுத்தமாக தடைபட்டது. மின் விசிறிகள், மின் விளக்குகள்எதுவும் இயங்கவில்லை.

சென்னையில் வெயில் ஏற்கனவே கடுமையாக உள்ளது.

வெயிலின் கடுமையால் காற்று கூட சூடாகவே வீசுகிறது. இந்நிலையில் கரண்ட் கட்ஆனதால் பயணிகள் ரயிலை விட்டு கிழே இறங்கினர்.

சிறிது நேரத்தில் கரண்ட் வரும் என பயணிகள் எதிர்பார்த்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் கரண்ட் வராததால் அவர்கள் பிளாட்பாரத்தில் உக்கார்ந்து தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த அதிகாரிகள் உடனடியாக இடத்திற்கு வந்தனர். டெக்னிஷியன்களும்உடனடியாக வரவழைக்கப்பட்டு மின்சாரம் பெற வழிவகை செய்யப்பட்டது.அதன்பின்னரே பயணிகள் அவரவர் இருக்கைக்கு சென்றனர்.

பெட்டிகளில் மின்சாரம் தடைபட்டதால் தமிழ்நாடு எக்ஸரயில் ஒரு மணிநேரம்தாமதமாக புறப்பட்டு சென்றது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+