அதிமுக மிரட்டல் தொடர்ந்தால் ஆண்டிப்பட்டியில் போட்டி: கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக தரப்பிலிருந்து எனது கட்சி வேட்பாளர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள்நீடித்தால் ஆண்டிப்பட்டியில் நான் போட்டியிட நேரிடும் என்று பார்வர்ட் பிளாக்தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

சென்னையில் தனது கட்சியின் மேலும் 5 வேட்பாளர்களின் பெயர்களை கார்த்திக்வெளியிட்டார்.

அதன் விவரம்:

மேலூர்- வசந்த சேனன்

சமயநல்லூர்- ஆர்.ஜி.ராஜாசிங்

நிலக்கோட்டை- மனோகரன்

மானாமதுரை- ரமேஷ்

கோவை மேற்கு- செந்தில்குமார்

ஸ்ரீரங்கம் வேட்பாளர் மாற்றம்:

அதே போல ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டு மகாலட்சுமி என்பவர் புதியவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், தேர்தலில் போட்டியிட எனக்குவிருப்பம் இல்லை. அதிமுக பொதுச் செயலாளரையோ, திமுக தலைவரையோ பெயர்சொல்லி குறிப்பிட நான் விரும்பவில்லை.

அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன்.

தலைவர்களை எதிர்த்துப் போட்டியிடுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால்அதிமுக தரப்பிலிருந்து எனது கட்சி வேட்பாளர்களுக்கு மிரட்டல்கள் நீடித்தால்ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் போட்டியிட நேரிடலாம்.

சிங்கம் சின்னத்தை முடக்கவும் சிலர் சதி செய்கிறார்கள். இப்படியெல்லாம் தொடர்ந்துநடந்தால் ஆண்டிப்பட்டி வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இடம் பெறுவதைதடுக்க முடியாது.

தேர்தல் பிரசாரத்தை 10ம் தேதி அல்லது 11ம் தேதி தொடங்குவேன். தேவர்நினைவிடத்தில் பூஜை செய்து விட்டு எனது பிரசாரம் தொடங்கும்.

பார்வர்ட் பிளாக் கட்சி முக்குலத்தோருக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அனைத்துஇனத்தினருக்கும் பொதுவானது என்றார் கார்த்திக்.

கார்த்திக் கட்சி வேட்பாளர் ஒருவரை ஜீப் ஏற்றிக் கொல்லவும், அவருக்கு ஆதரவுதெரிவித்த தென் மாவட்ட மூத்த தலைவர் ஒருவரை உளவுப் பிரிவு போலீசார் ஜீப்பில்வலுக்கட்டாயமாக ஏற்றிப் போய் மிரட்டி ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும்,இன்னொரு வேட்பாளர் போட்டியிலிருந்து விலகச் சொல்லி மிரட்டப்பட்டதும்நினைவுகூறத்தக்கது.

நடராஜன் மூலமாக கெஞ்சியும் பின்னர் மதுரை ஆதீனம், அடாவடி சினிமாபைனான்சியர் ஆகியோர் மூலமாக மிரட்டியும் கார்த்திக் தரப்பை அடிபணிய வைக்கஅதிமுக முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

INDIA NEWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+