சேப்பாக்கத்திலிருந்து கருணாநிதி பிரசாரம் இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி, தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தான் போட்டியிடும்சேப்பாக்கம் தொகுதியில், தொடங்குகிறார்.
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல் வீரர்கள்கூட்டம் சேப்பாக்கத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் கருணாநிதி கலந்துகொண்டு பேசுகிறார்.இக்கூட்டத்தின் மூலம் தனது தேர்தல் பிரசாரத்தையும் கருணாநிதி தொடங்குகிறார்.
திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாட்கள் அவர் சேப்பாக்கத்தில் தீவிர பிரசாரம்மேற்கொள்கிறார்.
சேப்பாக்கத்தை முடித்து விட்டு வட தமிழகத்தில் தனது தேர்தல் பிரசாரத்தைதொடர்கிறார் கருணாநிதி.
சேப்பாக்கத்தில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சியின் தலைவர் தாவூத் மியாகான் (காயிதே மில்லத்தின் பேரன்) போட்டியிடுகிறார்என்பது நினைவிருக்கலாம்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications