அதிமுகவில் திமுக கவிஞர் நிர்மலா சுரேஷ்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திமுக இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவரான கவிஞர் நிர்மலா சுரேஷ்மதுரையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
சென்னையைச் சேர்ந்தவர் கவிஞர் நிர்மலா சுரேஷ். திமுக இலக்கிய அணியின்மாநிலத் துணைத் தலைவராக இருந்து வந்தார். கடந்த 1991ம் ஆண்டு திமுக சார்பில்சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.இந் நிலையில் திடீரென திமுகவை விட்டு விலகி ஜெயலலிதாவை மதுரையில்சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் நிர்மலா சுரேஷ்.
பசுநேசன் பிரச்சாரம்:
இதற்கிடையே, நடிகர் ராமராஜன் முதல்வர் ஜெயலலிதாவை மதுரையில் சந்தித்து தான்அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரம் தொடங்க இருப்பதாக கூறி அவரிடம் ஆசிபெற்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதிமுகவுக்காக பசுநேசன் ராமராஜன் பிரசாரத்தில்குதிப்பது குறிப்பிடத்தக்கது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications