பாண்டிச்சேரி: திமுகவுக்கு காங் 11 சீட் ஒதுக்கீடு
சென்னை:
திமுக, காங்கிரஸ் இடையே பாண்டிச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அம் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவுக்கு 11தொகுதிகளை அக்கட்சி ஒதுக்கியுள்ளது.புதுவை சட்டசபைத் தேர்தலிலும் தமிழகத்தைப் போலவே கூட்டணி தொடர திமுகமற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயன்று வந்தன. இதைத் தொடர்ந்து காங்கிரஸ்தரப்பிலிருந்து திமுக, பாமக ஆகிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன.
டெல்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் திமுக சார்பில் மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போதுகாங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம்இன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில், புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் சண்முகம், திமுகஅமைப்பாளர்ஆர்.வி.ஜானகிராமன் ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தப்படி திமுகவுக்கு 11 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications