அஸ்ஸாமில் இன்று கடைசி கட்ட வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
கெளஹாத்தி:
அஸ்ஸாமில் சட்டமன்றத் தேர்தலுக்கான கடைசி கட்ட (இரண்டாம் கட்ட) வாக்குப் பதிவு இன்று தொடங்கியது.
மிக பலத்த ராணுவ, பாரா மிலிட்டரி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு நடந்துவருகிறது. காலையில் மழை பெய்ததால் வாக்குப் பதிவு சில இடங்களில் பாதிக்கப்பட்டது.தெற்கு மற்றும் மேற்கு அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடக்கிறது. முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 3ம் தேதி நடந்தது.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications