தேர்தல் ஆணையம் மீது ஜெ மீண்டும் பாய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அவர்,பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்விகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை தேர்தல்நேரத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் அறிவித்தது விதிமீறலாகும்.
நாங்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், தேர்தல் நேரத்தில் வெளியிட்டு ஓட்டு வேட்டையாடநினைக்கிறார்கள். தேர்தல் விதியை மீறிய அமைச்சருக்கு நோட்டீஸ் மட்டுமே அனுப்பியுள்ளது தேர்தல்ஆணையம்.
அதே நேரத்தில் சின்ன விஷயத்துக்காக (தனக்கு ஜால்ரா போட்டது) சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜைஇடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதன்மூலம் தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளதுஎன்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications