ஜெயலலிதாவுக்கே ஜெயம்: கெளடா ஆரூடம்
தேன்கனிக்கோட்டை:
ஜெயலலிதா தலைமயிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு வருகிற தேர்தலில்அமோக வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதளதலைவருமான தேவெ கெளடா கூறியுள்ளார்.
கெளடா குடும்பத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் உள்ள நெருக்கம் ஊர் அறிந்தது.இரு தரப்பினருக்கும் இரு மாநிலங்களிலும் உள்ள நலன்கள் பரஸ்பரம் காத்துக்கொள்ள இந்த லிங்க் உதவியாக உள்ளது.இதனால் தான் தமிழகத்தில் எந்த அமைப்பும் இல்லாத கெளடாவின் மதசார்பற்றஜனதா தளத்துக்கு ஒரு சீட் ஒதுக்கியது அதிமுக. சாஸ்திரத்துக்காக கூட்டணியில்சேர்க்கப்பட்டுள்ள கெளடாவின் கட்சி தள தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம்தேன்கனிக்கோட்டையில் விருப்ப மனுக்களைப் பெற்றார் கெளடா. பின்னர்அவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.
அப்போது தனக்கு சீட் வேண்டும் என்று கேட்டதைவிட, இவருக்கு சீட் தரக் கூடாதுஎன்று கோரி பலரும் பேசியதால் அவ்வப்போது பிரச்சனை உருவானது.
அவர்களை எல்லாம் கெளடா சமாதானப்படுத்தினார். இந்தத் தொகுதியில் நிறுத்தவன்னிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரைத் தேடி வருகிறார் கெளடா.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் கெளடா பேசுகையில், அதிமுக கூட்டணியில்எனது கட்சியும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. வரும் சட்டசபைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கு அமோக வெற்றிகிடைக்கும்.
தளி தொகுதிக்கான நேர்காணல் நடந்து முடிந்துள்ளது. விரைவில் வேட்பாளர் பெயர்அறிவிக்கப்படும் என்றார் கெளடா.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications