அபத்தமாக பேசும் ஜெயலலிதா: ப.சிதம்பம்
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக ஞிஞ்தல்வர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளது, கொஞ்சமும் பொறுப்பில்லாத பேச்சாகும் என்றுமத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில்வன்முறையைத் தூண்டி, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று காரணம் காட்டிதேர்தலை தள்ளி வைக்க எதிர்க்கட்சிகள் முயலுவதாக தல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியிருப்பது அபத்தானது.இதில் சிறிது கூட ஆதாரம் கிடாையது. மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளஜெயலலிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழக முதல்வரிடம்தான் உள்துறை, உளவுத்துறை உள்ளது.
அனைத்துத் துறைகளுக்கும் கூட அவர்தான் பொறுப்பு.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமையும் அவருக்குத்தான் உள்ளது. அதைவிடுத்து பொறுப்பற்ற முறையில் முதல்வர் பதவியில் இருப்பவர் பேசுவதை ஏற்கமுடியாது.
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி விவகாரம் குறித்து நான் ஏற்கனவே தெளிவாகவிளக்கியுள்ளேன். அந்த வங்கி முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் உள்ளது.
முறையற்ற வகையில் கொடுக்கப்பட்ட கடன்கள், கொடுக்கப்பட்ட கடன் நிலுவைதிரும்பி வராதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்தான் அந்த வங்கி நஷ்டத்தைசந்தித்தது. இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமம் கிடையாது.
ரிசர்வ் வங்கி சில விளக்கங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளது. அந்தவிளக்கங்களை அளித்தால் இன்று மாலையே மீண்டும் சிவகங்கை வங்கிக்குவிதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக் கொள்ள ரிசர்வ் வங்கிஅனுமதி அளிக்கும்.
திமக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு அரிசிஉள்ளிட்டவை குறித்து எனது தேர்தல் பிரசாரத்தின்போது விரிவாக பதில் அளிக்கிறேன்என்றார் ப.சிதம்பரம்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications