ஜெ. நடத்தும் கற்கால ஆட்சி: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி:
ஜெயலலிதாவின் ஆட்சி பொற்கால ஆட்சி அல்ல, இது ஒரு கற்கால ஆட்சி என பாமக நிறுவனர் ராமதாஸ்கூறினார்.
காவேரிப்பட்டிணத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,கடந்த 5 வருட வேதனையை முடிவுக்குக் கொண்டு வர தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். 234தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் தமிழ் ஆட்சி மலரும்.
ஜெயலலிதா தனது ஆட்சியை பொற்கால ஆட்சி என்கிறார். இது பொற்கால ஆட்சியா?.. இது ஒரு கற்காலஆட்சி. அக்கிரமம், அட்டூழியம், ஊழல்.. என்று ஜெயலலிதாவின் ஆட்சியைப் பற்றி தொல்லிக் கொண்டேபோகலாம்.
விவசாயிகள், ஏழைளை மனதில் வைத்து மிக அருமையான தேர்தல் அறிக்கையை தயாரித்திருக்கிறார்கருணாநிதி. அந்த நன்மைகள் உங்களுக்குக் கிடைக்க திமுகவை ஆட்சியில் அமர்த்துவோம் என்றார்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications