கேப்டன் மீது டிஆர் சரமாரித் தாக்கு
கடலூர்:
கடலூரில் தனது கட்சியினரிடையே பேசிய லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர், தேமுதிக தலைவர்விஜய்காந்தை போட்டு வாங்கு வாங்கு என்று வாங்கினார்.
அதன் விவரம்:நான் மூன்று முதல்வர்களை எதிர்த்து அரசியல் செய்தவன். மாக்கெட் போனதால் கட்சி தொடங்கியவனல்ல நான்.நான் தான் நாளைய முதல்வர் என்று கூச்சலிடவில்லை. 6 மாதத்தில் கட்சி தொடங்கி டிஜிட்டல் போர்ட்வைத்துவிட்டால் முதல்வராகிவிட முடியுமா?
ஏழைகளுக்கு 15 கிலோ அரிசி தருவதாக விஜய்காந்த் கூறுகிறார். நான் 30 கிலோ தருவதாக சொல்கிறேன்.ஏனென்றால் நான் ஆட்சிக்கு வரப் போவதில்லை.
தமிழக மக்களே, கோட்டைக்குப் போக வேண்டியவர்களை தயவு செய்து கோடம்பாக்கத்தில் தேடாதீர்கள் (அப்பநீங்க?). தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஜய்காந்த் தமிழ்நாட்டைக்காப்பாத்தப் போறாராம்.
விஜய்காந்தை வைத்து படமெடுத்த ஜீ.வி (சொக்கத் தங்கம்-டைரகடர் பாக்கியராஜ்) தற்கொலை செய்து கொள்ளவேண்டிய நிலைக்குப் போனார். இவரை வைத்துப் படமெடுத்த காஜா மொய்தீன் தற்கொலைக்கு முயறசி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் தயாரித்த பேரரசு படத்தை அம்போவென விட்டுவிட்டு தனதுமச்சான் தயாரித்த சுதேசி படத்தை வெளியிட்ட விஜய்காந்த் ரொம்ப நேர்மை, நியாயம் பேசக் கூடாது.
என் அரசியல் குரு கருணாநிதி. அவர் கைதானபோது சென்ட்ரல் ஜெயின் கதவில் காரை விட்டு மோதியவன்தான் இந்த டி.ஆர். பாண்டி பஜாரின் போராட்டம் நடத்தி கைதானேன்.
யாருமே இல்லாமல் தனியே நின்ற ஜெயலலிதாவுக்காக கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் செய்தேன்.
நான் 9 சீட் கேட்டேன். ஆனால், எனக்கு அமைப்புரீதியில் பலமில்லை என்று உளவுத்துறை சொன்னதாகசொன்னார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைக் கவிழ்க்க உளவுத் துறை திட்டம்போட்டு செயல்படுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாய் அம்மா அம்மா என்று குரல் தந்தேன். ஆனால், அவர் ஒரு சும்மா என்பதைநிரூபித்துவிட்டார் என்றார் டி.ஆர்.
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications