விஜய்காந்த், திருமாவுக்கு பொது சின்னம் இல்லை!
கோவை:
விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு பொதுவான சின்னம் ஒதுக்க முடியாது என மத்தியதேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் வேறு வேறு சின்னங்களின் கீழ் போட்டியிடவேண்டிய நிலைக்கு கேப்டன் தள்ளப்பட்டுள்ளார்.நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 234 தொகுதிகளிலும்வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அனைத்து வேட்பாளர்களின் பெயர்களும்அறிவிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து பொதுவான சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விஜயகாந்த்விண்ணப்பித்துள்ளார். மோதிரம், புத்தகம், அகல்விளக்கு ஆகிய மூன்றில் ஏதாவதுஒரு சின்னத்தை தனது கட்சிக்கு ஒதுக்குமாறு அவர் கோரியிருந்தார்.
ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி, அனைத்துத் தொகுதிகளில் போட்டியிட்டாலும்கூட பொதுவான சின்னத்தை ஒதுக்க சட்டப்படி வழியில்லை என்று தேர்தல் ஆணையஅதிகாரிகள் கை விரித்துவிட்டனர்.
இதனால் விஜயகாந்த் கட்சிக்கு பொதுவான சின்னம் கிடைக்காது.
முன்தாக கோவையில் நடந்த தொகுதி தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவிஅதிகாகளுக்கான பயிற்சி முகாமில் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா,தேர்தல் ஆணைய செயலாளர் வில்பிரட், சார்பு செயலாளர் ஆஷிஷ் சக்ரவர்த்திஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் வில்பிரட், ஆஷிஷ் சக்ரவர்த்தி ஆகியோரிடம், விஜயகாந்த்கட்சிக்கு தனியான சின்னம் ஒதுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு வில்பிரட் பதிலளிக்கையில், தேர்தல் ஆணைய விதிமுறைகள் மிகத்தெளிவாக உள்ளன. அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே ஒரே சின்னம்ஒதுக்கப்படும். அங்கீகாரம் பெறாத கட்சிகள், அவை எத்தனை தொகுதிகளில்போட்டியிட்டாலும் தனித்தனியான சின்னங்கள்தான் ஒதுக்கப்படும்.
அக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியின் தேர்தல் அதிகாரிதான்சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுப்பார் என்றார் வில்பிரட்.
இதனால் விஜயகாந்த் கட்சிக்கு 234 தொகுதிளிலும் 234 சின்னங்கள் ஒதுக்கப்படும்.
ஒரே கட்சி அதிகபட்ச சின்னங்களில் போட்டியிடுவது தமிழக அரசியல் வரலாற்றில்இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. அந்த வகையில் கேப்டன் சாதனைபடைக்கவுள்ளார்.
இதேபோல விடுதலைச் சிறுத்தைகள், புதுவை கண்ணனின் புதுச்சேரி முன்னேற்றகாங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் பொதுவான சின்னம் கிடைக்காது.
| INDIA NEWS |
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications