2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் யாரும் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாளை காலை 11மணிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 20ம் தேதி வரை மனுக்களைத் தாக்கல்செய்யலாம். 21ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 24ம் தேதிக்குள்மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடமுடியும். அதற்கு மேல் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 3வது தொகுதியில்மனு தாக்கல் செய்தால் அந்த மனு பரிசீலனையே செய்யப்படாமல் தள்ளுபடிசெய்யப்படும்.

வேட்பு மனுதாக்கலின்போது டெபாசிட் தொகையைக் கொடுக்கும்போது சிலர்சில்லறை நாணயங்களாவும் கொடுப்பதுண்டு. அதை தேர்தல் அதிகாரிகள் நிராகரிக்கமுடியாது, வாங்கிக்தான் ஆக வேண்டும் என்றார் நரேஷ்குப்தா.

நடராஜ்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

இதற்கிடையே சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் இடமாற்ற விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்தல்ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டிப் பேசியதால் ஆணையர் நடராஜை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழகஅரசும், ஜெயலலிதாவின் ஜால்ராக்களான முன்னாள் டிஜிபிக்கள் தேவாரம், பொன். பரமகுரு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் பேசித்தீர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசுத் தரப்பில் இருந்து இதுவரை தேர்தல் கமிஷனுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தற்போது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது. தேர்தல் தேதிகள்அறிவிக்கப்பட்ட நிமிடம் முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதை மீறுவோர் யாராக இருப்பினும் அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.

எனவே நடராஜ் விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்றுமனுவில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+