ஜெயாவின் பாசிச ஆட்சி ஒழியட்டும்-ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

திருமயம்:

ஜெயலலிதாவின் பாசிச, சர்வாதிகார ஆட்சி ஒழியட்டும் என்று மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம் சாபமிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்வேட்பாளர் ராமசுப்புராமுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் ஓட்டு வேட்டையாடினார். அவர்பேசுகையில்,

இந்தத் தேர்தல் சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையிலான தேர்தல். இந்தஇரண்டுக்கும் இடையேதான் போட்டி.

கடந்த ஐந்து வருட கால ஜெயலலிதா ஆட்சியை நினைத்துப் பாருங்கள். எத்தனைகொடுமைகள், எத்தனை பொய் வழக்குகள், எத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகள்?அடுக்கிக் கொண்டே போகலாம்.

எத்தனை லட்சம் பேர் ஒரே நாளில் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள், எத்தனை லட்சம்பேர் கைது செய்யப்பட்டார்கள், எத்தனை பொய் வழக்குகள் போடப்பட்டது,

எத்தனை பேர் அரசு வீடுகளிலிருந்து ஓட ஓட விரட்டப்பட்டார்கள், எத்தைன பெண்அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

இந்த அரசு செய்த தவறை உச்ச நீதிமன்றம்தானே திருத்தியது, உச்ச நீதிமன்றம்தானேமீண்டும் அரசு ஊழியர்களுக்கு வேலை கொடுத்தது.

அப்படிப்பட்ட பாசிச, சர்வாதிகார ஆட்சி இந்த தேர்தல் மூலம் ஒழிய வேண்டும்.தூக்கி எறியப்பட வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+