சிம்ரனின் சூறாவளி பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னையில் தனது பிரசாரத்தைத் தொடங்கிய நடிகை சிம்ரன் தொடர்ந்து பல்வேறுமாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகவாக்கு சேகரி"தது வருகிறார்.
![]() |
சமீபத்தில் அதிமுகவில் இணைந்த நடிகை சிம்ரன் சென்னை ஆர்.கே.நகர் அதிமுகவேட்பாளர் சேகர்பாபுவுக்கு ஆதரவாக பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசினார்.
அவருடன் நடிகைகள் கோவை சரளா, விந்தியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதையடுத்து இன்று வேதாரண்யத்தில் சிம்ரன் பிரசாரம் மேற்கொள்கிறார். மாலைநாலரை மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கும் சிம்ரன் வீதி வீதியாக வேனில் சென்றுபிரசாரம் செய்கிறார்.
![]() |
தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, தஞ்சை ஆகிய பகுதிகளிலும் பிரசாரம்மேற்கொள்கிறார்.
15ம் தேதி சென்னை அருகே உள்ள தாம்பரம்,செங்கல்பட்டு, திருப்போரூர்,காஞ்சிபுரம் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்கிறார்.
பல்லாவரம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், செங்கல்பட்டு,திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர், மதுராந்தகம், காஞ்சிபுரம்,அச்சிரப்பாக்கம் ஆகிய இடங்களில் சிம்ரன் பேசுகிறார்.














Click it and Unblock the Notifications