முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திமுகவுக்கு ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த, தற்போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளராஜாராம், ராஜா முகம்மது, வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவுதெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும், சபாநிாயகராகவும் இருந்தவர் ராசாராம். அதேபோல ராஜாமுகம்மது, வி.வி.சுவாமிநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தனர். தற்போது 3 பேரும் தீவிரஅரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளனர்.

இந் நிலையில் 3 பேரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஆரோக்கியமான நல்லாட்சிஅமைவதற்கான அரிய வாய்ப்பு வாக்காளர்களுக்குக் கிடைத்துள்ளது. திமுக கூட்டணி முதன்மையான இடத்தில்உள்ளது.

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நல்லாட்சிக்கு உறுதி சொல்லப்பட்டுள்ளது. எனவேஇந்தக் கூட்டணியின் வெற்றிக்காக உழைப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+