முதல் நாளில் 81 வேட்பு மனுக்கள் தாக்கல்: நெப்போலியன் சொத்து ரூ. 4 கோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளில் 81 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

மே 8ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வியாழக்கிழமைதொடங்கியது. முதல் நாளிலேயே முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, பிச்சாண்டி, நடிகர் நெப்போலியன், ஆலடி அருணாமகள் பூங்கோதை, காங்கிரஸ் தரப்பில் ஞானசேகரன், பாஜகவின் ஹண்டே, தே.மு.தி.க. அவைத் தலைவர்பண்ருட்டி ராமச்சந்திரன், ஆகிய முக்கிய வேட்பாளர்களுடன் சில சுயேச்சைகளும் வேட்பு மனு தாக்கல்செய்துள்ளனர்.

மொத்தம் 81 பேர் முதல் நாளில் மனு தாக்கல் செய்தனர். இதில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 12 பேர் (மாற்றுவேட்பாளர்கள் 3 பேர்), காங்கிரஸ் சார்பில் 2 பேர் (ஒரு மாற்று வேட்பாளர்), பாஜக சார்பில் 4 பேர் (2 மாற்றுவேட்பாளர்கள்),

மதிமுக 2 (2 மாற்று வேட்பாளர்கள்), 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் (ஒரு மாற்று வேட்பாளர்), 4பார்வர்ட் பிளாக் வேட்பாளர்கள், தே.மு.தி.க. வேட்பாளர் ஒருவர் (ஒரு மாற்று வேட்பாளர்) மற்றும்

40 சுயேச்சை வேட்பாளர்கள் முதல் நாளில் மனு தாக்கல் செய்தவர்கள் ஆவர். வேறு சில குட்டிக் கட்சிகளின்வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தொட்டியம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தரப்பட்டதைக் கண்டித்து முன்னாள் திருச்சி மாவட்ட திமுகசெயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கண்ணையன், காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகவேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராஜபாளையம் தொகுதியில், மன்மதன் என்ற சுயேச்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். இவர்இத்தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வது இது 21வது முறையாகும். ஒருமுறை கூட மன்மதன்டெபாசிட் வாங்கியதில்லை என்பது தனிக் கதை.

மொத்தம் 56 தொகுதிகளில் மட்டுமே வேட்பு மனுதாக்கல் நடந்தது. அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்தியகம்யூனிஸ்ட், பாமக சார்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இன்று தமிழ்ப்புத்தாண்டு தினம் என்பதால் மனுதாக்கல் கிடையாது. நாளை மீண்டும் மனு தாக்கல் நடைபெறும்.

நெப்போலியன் சொத்து ரூ. 4 கோடி:

மையிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் நெப்போலியன் தனது சொத்து மதிப்பு ரூ. 4கோடி என்று தெரிவித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோர் தங்களது வேட்பு மனுவுடன் சொத்து மதிப்பையும் சேர்த்து தாக்கல்செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உதத்ரவாகும்.

அதன்படி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் தங்களது சொத்து மதிப்புகளையும் சேர்த்து தாக்கல்செய்தனர்.

நெப்போலியன் தனது சொத்து மதிப்பு ரூ. 4 கோடி என்று கூறியுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள சொத்துவிவரப் பட்டியல்:

ரொக்கம் ரூ. 4.16 லட்சம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ. 1,000, தலைமைச் செயலகத்தில் ரூ. 4,000,ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் ரூ. 7,000, ஜீவன் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனப் பங்குகள் ரூ. 42.50லட்சம்,ஜீவன் சீ சைட் நிறுவனப் பங்குகள் ரூ. 9.50 லட்சம், ஜீவன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனப் பங்குகள் ரூ. 43,000,

எல்.ஐ.சி.யில் ரூ. 5 லட்சம், பஜாஜ் அலையன்ஸில் ரூ. 15 லட்சம் முதலீடு.

மனைவி ஜெயசுதா பேரில் உள்ள சொத்துக்கள்: எல்.ஐ.சி.யில் ரூ. 10 லட்சம், பஜாஜ் அலையன்ஸ் இன்சூரன்ஸில்ரூ. 15 லட்சம். மகன்கள் தனுஷ் பெயரில் ரூ. 15 லட்சம் இன்சூரன்ஸ், குணால் பெயரில் ரூ. 15 லட்சம் இன்சூரன்ஸ்முதலீடு.

கார்கள் விவரம்: ரூ. 6.27 லட்சம் மதிப்புள்ள டாடா சபாரி கார், ரூ. 7.60லட்சம் மதிப்புள்ள டயோடா குவாலிஸ்,

இதுதவிர ஒரு மாருதி ஆல்டோ, ஒரு மாருதி 800, ஹோண்டா ஆக்டிவா டூவீலர், கைனடிக் ஹோண்டா டூவிலர்ஆகியவை.

தங்க நகை விவரம்: மொத்தம் 47 பவுன் தங்க நகைகள், 110 கிராம் வெள்ளி நகைகள். மனைவி பெயரில் 25.5பவுன் தங்க நகைகள், 955 கிராமம் வெள்ளி நகைகள்.

அசையா சொத்துக்கள்: கொடைக்கானல், பூம்பாறை கிராமத்தில் ரூ. 93 லட்சம் மதிப்புள்ள நிலம், திருச்சிமாவட்டம் லால்குடி வட்டம், குமுளூர் கிராமத்தில் ரூ. 18.75 லட்சம் மதிப்புள்ள நிலம்,

மனைவி பெயரில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தம்பாறை கிராமத்தில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலம்.

சென்னை அசோக் நகர் 10வது அவென்யூவில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மைலாப்பூர்ஜெகதாம்பாள் காலனியில் ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வீடு, மனைவி பெயரில் அதே தெருவில் ரூ. 44 லட்சம்மதிப்புள்ள வீடு,

மைலாப்பூரில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று தனது சொத்து விவரப் பட்டியலில்நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+