ஜெ. அலையில் சிக்கிய சீமான்!
சின்னமனூர்:
முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள்மத்தியில் ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் சீமான் சிக்கிக் கொண்டார். இதனால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்தில் தனது பிரசாரத்தைத்தொடங்கினார். மாலை ஐந்தரை மணியளவில் அவர் சின்னமனூர் வந்தார். அங்கு பஸ்நிலையம் அருகே வேனை நிறுத்தி வேனிலிருந்தபடி பேசத் தொடங்கினார்.ஜெயலலிதாவைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் பெரும் திரளான மக்கள்கூடி விட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனம் எதுவும் போக முடியாத நிலைஇருந்தது.
இந் நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும்திமக வேட்பாளர் சீமான் கம்பத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் வழியில்சின்னமனூர் வந்தார்.
அதிமுக தொண்டர்கள் கூட்டத்தைத் தாண்டி அவர் செல்ல முடியவில்லை, அவரதுகாரைச் சுற்றிலும் ஏராளமான அதிமுகவினர் திரளாக கூடி நின்றனர்.
இதனால் கூட்டத்தினர் மத்தியில் சிக்கிக் கொண்டார் சீமான். உடனடியாக போலீஸார்விரைந்து வந்து சீமானுடைய காரை அருகில் இருந்த தெருவுக்குள் கொண்டு சென்றுபாதுகாப்பாக நிறுத்தினர்.
ஜெயலலிதா தனது பேச்சை முடித்துக் கொண்டு கம்பம் கிளம்பிய பின்னர்தான்சீமானால் அங்கிருந்து நகர முடிந்தது. அதுவரை காரில் அமர்ந்தபடி ஜெயலலிதாவின்பேச்சை அவர் கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர் அவர் ஆண்டிப்பட்டி புறப்பட்டுச்சென்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications