இதுதான் என்னுடைய கடைசி படம்.. ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ‘ஜனநாயகன்’ பார்த்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே தான் சென்னையில் இன்று முதல்வர் விஜய் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் 'ஜனநாயகன்' திரைப்படத்தை ரசித்தார்.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் வகையில் 'ஜனநாயகன்' திரைப்படம் தயாரிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் தாமதமானது.

jana nayagan

இதற்கிடையே தான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி வெற்றி பெற்றது. விஜய்யும் முதல்வராகி விட்டார். தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்து 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைத்துள்ளது.

அதன்படி நாளை 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரைப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே தான் விஜய் மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் இன்று ஜனநாயகன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரசித்தார்.

அதன்படி சென்னை கிரீன்வேஸ் சாலை இயல் இசை கல்லூரி வளாக அரங்கில் 'ஜனநாயகன்' சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. மாலை 6.30 மணிக்கு அங்கு சென்று முதல்வர் விஜய் தனது படத்தை ரசித்தார். விஜய்யுடன் தமிழக தலைமை செயலாளர் சய் குமார், முதலமைச்சரின் தனி செயலாளர் செந்தில் குமார் உள்பட மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இந்த திரைப்படத்தை பார்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+