வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா
தேனி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும்க முதல்வர் ஜெயலலிதா இன்று தனதுவேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளஜெயலலிதா தேனி, போடி பகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவேதேனி என்.ஆர்.டி. நகருக்கு வந்துவிட்டார்.அங்குள்ள தனியார் பங்களாவில் தங்கிய ஜெயலலிதா இன்று காலை தனக்குராசியான பச்சை சேலையில் 11.15 மணிக்குக் கிளம்பி மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்திற்கு வந்தார். உச்சி வெயிலுக்கு முன் நல்ல நேரத்தில் தனது மனுவைஆண்டிப்பட்டி தொகுதி தேர்தல் அதிகாரியான சூர்யநாராயணனிடம் வழங்கினார்.
கூடவே சசிகலாவும் பச்சை சேலையில் வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம்ஜெயலலிதா பேசுகையில்,
அதிமுக கூட்டணிக்கு வருகிற தேர்தலில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்.பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக தலைமையிலான ஜனநிாயக மக்கள் கூட்டணிவேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்.
யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எந்தக்கூட்டணி போட்டியிட்டாலும், எந்தத் தலைவர் பிரசாரம் செய்தாலும் அதைப் பற்றிக்கவலைப்படாமல், எனது தலைமையிலான அதிமுக அரசு மீண்டும் அமையவேண்டும் என்று மக்கள் ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
பின்னர் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட குன்னூர் பகுதியில் ஜெயலலிதாபிரசாரத்தைத் தொடங்கினார்.
ஜெயலலிதா வருகையையொட்டி தேனி முழுவதும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை:
குன்னூர் பகுதியில் அவர் பேசுகையில், கடந்த சட்டசபை இடைத் தேர்தலில் நான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டபோது, என்னைத் தேர்வு செய்யுமாறுகேட்டுக் கொண்டேன். நீங்களும் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள். அதனால் தமிழகம் என்னை முதலமைச்சராக என்னைத் தேர்ந்தெடுத்தது.
நீங்கள் எனக்கு கட்டளை இடுங்கள், பணியாற்ற நான் காத்திருக்கிறேன். வரலாறு காணாத ஒரு வளர்ச்சியை நிச்சயம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குவழங்குகிறேன். எங்கே இருந்தாலும் எனது நெஞ்சமெல்லாம் இஙகே இருக்கின்ற உங்களிடத்தில்தான் இருக்கும்.
எப்போதும் என் நினைவில் இருப்பவர்கள் நீங்கள்தான். உங்களை மறந்து ஒரு நாளும் நான் இருக்கவில்லை.
மறுபடியும் உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளேன். ஆண்டிப்பட்டி தொகுதி அரசிப்பட்டியாக என்றும் திகழ எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மக்களே ஏமாறாதீர்கள் - ஜெ:
முன்னதாக போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து ஜெயலலிதா பேசுகையில், சில தலைவர்கள் கவர்ச்சிகரமான திட்டங்களைதேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் வரும்போதுதான் அவர்களுக்கு மக்கள் ஞாபகம் வரும். ஆனால் உங்கள் அன்புச் சகோதரியின் அரசுக்கு எப்போதுமே மக்கள் நினைவுதான்.
கலர் டிவி தருகிறேன் என்கிறார்கள், 2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்கிறார்கள். இதை மக்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது.
தேனி மாவட்ட மக்களின் உயிர் நாடியான முல்லைப் பெயாறு அணையின் உயரத்தை 152 அடியாக அதிகரிக்க உரிய நடவடிக்கையை எனது அரசு எடுக்கும்.தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications