எளிமை.. எளிமை.. வித்தியாச ஹண்டே!
சென்னை:
முன்னாள் அமைச்சரும், அண்ணா நகர் தொகுதி பாஜக வேட்பாளருமான டாக்டர்எச்.வி.ஹண்டே படு எளிமையாக நடந்து சென்றே வாக்கு சேகரிப்பது தொகுதிமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பிறப்பால் கன்னடரான ஹண்டே, தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.எம்.ஜி.ஆர். ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர்.காலத்திற்குப் பின்பு அவர் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.இந் நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். பாஜக மருத்துவ அணிசெயலாளராக இருந்த ஹண்டே வருகிற சட்டசபைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அண்ணா நகர் தொகுதியில் திமுக மற்றும் மதிமுக நேரடிப் போட்டியில் குதித்துள்ளன.மூன்றாவது முக்கிய வேட்பாளராக ஹண்டே விளங்குகிறார்.
திமுக சார்பில் ஆற்காடு வீராசாமி போட்டியிடுகிறார். மதிமுக சார்பில் விஜயாதாயன்பன் களத்தில் இருக்கிறார். இருவருக்கும் சற்றும் சளைக்காமல் கடும்போட்டியைக் கொடுத்துள்ளார் ஹண்டே. காரணம் அவரது பிரசார அணுகுமுறை.
ஆர்ப்பாட்டமான தொண்டர் கூட்டம், அமர்க்களப்படுத்தும் வாகன அணிவரிசை,ஊரைக் கூட்டும் ஒலிபெருக்கி சத்தம் என எதுவும் இல்லாமல் படு எளிமையாகபிரசாரம் செய்து வருகிறார் ஹண்டே.
நடந்தே வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கிறார். இதை திமுக, மதிமுகவேட்பாளர்களிடம் காண முடியவில்லை என்பது தொகுதி மக்களின் பேச்சு.
ஹண்டேவுக்கு இப்போது வயது 78. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல்படு கேஷுவலாக வீதி வீதியாக நடந்து சென்று வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்துவாக்கு சேகரிக்கும் ஹண்டேவின் பிரசார உத்தி வாக்காளர்களை கவர்ந்துள்ளது.
அனுபவஸ்தரான ஹண்டேவுக்கு பெண்கள், ஆண்கள் என அனைத்துத் தரப்பினரும்உற்சாக வரவேற்பளிக்கின்றனர்.
இந்த வரவேற்பு வாக்குகளாக மாறினால் திமுக, மதிமுக வேட்பாளர்கள் நிலைகொஞ்சம் சிக்கலாகலாம்.












Click it and Unblock the Notifications