ஐயா வாங்க.. அய்யோ பாவம் வேட்பாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வேட்பு மனுவை முன்மொழிய போதிய ஆட்கள் வராததால், விரக்தியடைந்துமனுவைத் தாக்கல் செய்யாமலேயே திரும்பினார் தி.நகர் தொகுதி சமாஜ்வாடி கட்சிவேட்பாளர் தேவேந்திரன்.

தேர்தல் நேரத்தில் நடக்கும் கலாட்டாக்களிலேயே படு வித்தியாசமான காமெடிசென்னை தியாகராய நகரில் நடந்தது. இத்தொகுதியின் சமாஜ்வாடிக் கட்சிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் தேவேந்திரன்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்துகாத்திருந்தார் தேவேந்திரன்.

இவர் தேசிய கட்சியைச் சேர்ந்தவர் என்றவர் என்றாலும் இங்கு சுயேச்சையாகவேபோட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளரை முன் மொழிய குறைந்தது 10 பேர்தேவை.

ஆனால் வேட்பாளர் தேவேந்திரன் மட்டுமே அலுவலகத்திற்கு வந்திருந்தார். இதைத்தொடர்ந்து தனது செல்போன் மூலம் கட்சி அலுவலகத்தையும், தனக்குத்தெரிந்தவர்களையும் தொடர்பு கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலகத்தைக் கூறிசீக்கிரம் வந்து சேருங்கள், இல்லாவிட்டால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாதுஎன்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார்.

சில மணி நேரம் காத்திருந்தும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. இதையடுத்துகட்சித் தலைவரான இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணனுக்கே நேரடியாக போன்செய்து நீங்களாவது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வாருங்கள் என்று கோரிக்கைவிடுத்தார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் கோபாலகிருஷ்ணனும், மேலும் நான்கு பேரும் அங்குவந்தனர். ஆனால் மொத்தமே ஐந்து பேர் மட்டுமே இருந்ததால், இன்னும் ஐந்து பேர்வேண்டுமே என்று விசனப்பட்டார் தேவேந்திரன்.

பின்னர் கோபாலகிருஷ்ணனும் மற்றவர்களும் சிலருக்குப் போன் செய்து உடனடியாகவரக் கோரினர். ஆனால் யாரும் வரவில்லை.

காத்திருந்து காத்திருந்து கடுப்பாகிப் போன கோபாலகிருஷ்ணன், சரி நான் வருகிறேன்,ஆட்கள் சேர்ந்ததும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யுங்கள் என்று கூறி விட்டுக்கிளம்பினார். சோர்ந்து போன தேவேந்திரன் இனிமேல் யார் வரப் போகிறார்கள் என்றுநொந்து கொண்டு கிளம்பிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+