தமிழகம் வந்த 234 தேர்தல் பார்வையாளர்கள்
சென்னை:
234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள்இன்று தமிழகம் வந்தனர்.
இதுதவிர வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை மேற்பார்வையிடுவதற்கு 50சிறப்புப் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகின்றனர். இவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். சென்னை வந்தபார்வையாளர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு கார்களில்கிளம்பிச் சென்றனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு சென்ற உடனே பொறுப்புகளை ஏற்றுக்கொள்வர்.
இதையடுத்து அந்தத் தொகுதிகளின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த புகார்கள்உள்ளிட்டவை அவர்களது கட்டுப்பாட்டில் வந்து விடும். விதிமீறல் உள்ளிட்ட தேர்தல்தொடர்பான புகார்களை பார்வையாளர்களிடம்தான் தெரிவிக்க வேண்டும்.
புகார்கள் குறித்த தீர்வுகளை சம்பந்தப்பட்ட தொகுதி பார்வையாளர்களே நேரடியாகஎடுப்பர்.
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியை இவர்கள் எடுத்ததெற்கெல்லாம் நாடவேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு தொகுதி தேர்தல்பார்வையாளர்களுக்கு அதிக அளவில் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும், உதவிகளையும்மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்குவார். தொகுதியில் பதட்டம் நிறைந்த பகுதிகள்எவை, பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் பகுதிகள் எவை என்பது குறித்துபார்வையாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கலந்தாலோசித்து தேவையானபாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் மாநில காவல்துறையினர், மத்தியபடையினர், துணை நிலை ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications