கைவிலங்குடன் ஜெயேந்திரர்: பேனர் வைத்த மந்திரி மீது வழக்கு!
காஞ்சிபுரம்:
காஞ்சி சங்கராச்சாரியாரை முதல்வர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச்செல்வது போல பேனர் வைத்த அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட 5பேர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![]() |
| (இடது) முதலில் வைக்கப்பட்ட பேனர். பின்னர் மாற்றப்பட்ட பேனர் (வலது) |
இந்த பேனருக்கு எதிராக காஞ்சி மட பக்தர் மகாதேவன் என்பவர் காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்தார். இந்துத் துறவிக்கு கைவிலங்கிட்டு பேனர் வைத்ததன் மூன் இந்துக்களைபுண்படுத்திவிட்டனர் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி, உடனே கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம், அதிமுக எம்எல்ஏ மைதிலிதிருநாவுக்கரசு, அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்தனர்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி இந்த பேனர் வைக்கப்பட்டது. இந்த பேனருக்கு எதிர்ப்புக்கிளம்பியதையடுத்து அடுத்த சில நாட்களிலேயே ஜெயேந்திரர்-விஜயேந்திரர் இருந்த போர்ஷனைத் தூக்கிவிட்டுபெரிய ஜெயலலிதா படத்தை அதில் ஒட்டினர் அதிமுகவினர்.
இந்த விவகாரம் பெரிதானதையடுத்து அமைச்சரைக் கூப்பிட்டு ஜெயலலிதா டோஸ் விட்டதையடுத்து பின்னர்அந்த பேனரே தூக்கப்பட்டுவிட்டது.
நீதிமன்றத்தில் ஜெயேந்திரர்:
இதற்கிடையே ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இன்று ஜெயேந்திரர் சென்னை செசன்ஸ்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
மேலும் சுந்தரேச ஐயர், ரகு உள்ளிட்டோரும், அப்ரூவர் ரவி சுப்பிரமணியமும் ஆஜராகியிருந்தனர். இதையடுத்துவழக்கை வரும் ஜூன் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.













Click it and Unblock the Notifications