நாடார்களை நான் வெறுக்கவில்லை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நாடார் சமுதாயத்தினரை நான் விரோதிகள் போல நினைக்கவில்லை, அவர்களை நான்வெறுக்கவும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சரத்குமாரை திமுகவில் இருந்து இழுத்ததன் மூலம் நாடார் சமுதாயத்தின் வாக்குகளைதிமுக இழக்கும் என அதிமுக நினைக்கிறது.

இந் நிலையில் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுகவில் நாடார் சமுதாயத்தினருக்கு எப்படியெல்லாம் முக்கியத்துவம்தரப்பட்டது என்பதை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சரத்குமாருக்கு திமுகவில் முக்கியத்துவம்அளிக்கப்படவில்லை, நாடார்களை கருணாநிதி வெறுத்து ஒதுக்குகிறார் என்று நாடார்சமுதாயத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியதுஎனது கடமை.

ராஜ்யசபா எம்.பியாக சரத்குமாரை திமுக நிறுத்தியது. ராஜ்யசபா எம்.பி. பதவிஎன்பது பெருமைக்குரிய பதவி. அந்த சமயத்தில் திமுக சார்பில் ஒருவரை மட்டுமேஎம்.பி ஆக்க முடியும் என்ற நிலை இருந்தது.

கட்சியில் மற்றவர்களை எல்லாம் ஒதுக்கி விட்டு சரத்குமாருக்கு அப்பதவியைக்கொடுத்தோம். நிறையப் பேர் அப்பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில்அவர்களைப் புறக்கணித்து விட்டு சரத்குமாருக்கு எம்.பி. பதவியை திமுக கொடுத்தது.

தொடர்ந்து நடிப்புத் தொழிலில் சரத்குமார் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் அவரைமத்திய அமைச்சர் ஆக்க முடியவில்லை. இதே காரணத்திற்காகத்தான் எம்.ஜி.ஆர். கூடதிமுக அமைச்சரவையில் இடம்பெற முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

நாடார் சமுதாயத்தினரை திமுக எப்போதுமே கைவிட்டதில்லை, புறக்கணித்ததில்லை,வெறுத்து ஒதுக்கியதில்லை. இதற்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

கே.வி.பி.ஆசைத்தம்பியை எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ல் ஆதித்தனார்சபாநாயகராக அமர்த்தப்பட்டார்.

அப்போது அண்ணா முதல்வர். நான் தல்வர் பதவிக்கு வந்ததும் ஆதித்தனாரை உணவுமற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராக ஆக்கினேன். அதை யாரும் மறக்கக் கூடாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில வெங்கடேச பண்ணையாரின் மனைவி ராதிகாசெல்வியை திமுக சார்பில் நிறுத்தி வெற்றி பெற வைத்தோம்.

மறைந்த காமராஜருக்கு தேவையான அனைத்து மரியாதைகளையும் அவ்வப்போதுசெய்து வந்திருக்கிறோம்.

இப்போது கூட காமராஜர் பிறந்த நாளை கல்வி நாளாக திமுக கொண்டாடும் என்றுஅறிவித்துள்ளோம்.

எனவே நாடார் சமுதாயத் தலைவர்களுக்கு எனது வேண்டுகோள் எல்லாம், திமுகஉங்களை வெறுத்து ஒதுக்குவதாக நினைக்க வேண்டாம்.

இது குறித்து சிலர் செய்யும் தவறான பிரச்சாரத்தை மதிக்க வேண்டாம் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

திமுக பேச்சாளர்களுக்கு அறிவுரை:

இதற்கிடையே கருணாநிதி வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,

கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் விவரித்துக்கூறி திமுக பேச்சாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், சாலைத்தொழிலாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என அதிமுக ஆட்சியால் சமூகத்தின்அத்தனை பிரிவினரும் பாதிக்கப்பட்டதை எடுத்துக் கூறுங்கள்.

தங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது ஆட்சியாளர்கள் போட்ட கஞ்சா வழக்குகள், பொய்வழக்குகளை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.

நீதிமன்றங்கள் ஆட்சியாளர்களுக்கு தெரிவித்த கண்டனங்கள், ஆட்சியாளர்களுக்குஎதிராக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள், ஆட்சியாளர்களுக்கு எதிராக போடப்பட்டவழக்குகளை மக்களிடம் விவரமாக எடுத்துக் கூறுங்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 2 ரூபாய்க்கு கிலோ அரிசி,இலவச கலர் டிவி, இலவச எரிவாயு அடுப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை,அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+