தட்டில் போடும் நோட்டுக்கும் கணக்கு வேணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொது மக்கள் ஆரத்தி எடுக்கும்போது அந்தத் தட்டில் போடும் பணத்திற்கும்வேட்பாளர்கள் கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கிடுக்கிப் பிடிபோட்டுள்ளது.

வேட்பாளர்களின் செலவுகளை படு தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையம்முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

இதில் தினசரி செய்யும் செலவுகளைக் கணக்கு வைத்து பில்லுடன் சம்பந்தப்பட்டதொகுதி தேர்தல் பார்வையாளரிடம் தினசரி சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல்ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதில் கூட வரும் ஆதரவாளர்கள் மற்றும் புரோட்டா சால்னா, கட்டிங் சரக்குக்குஆசைப்பட்டு கூடவே வரும் அல்லக்கைகள் ஆகியோருக்கு வாங்கித் தரும்சாப்பாடு, இத்யாதி செலவுகளும் அடக்கம்.

விளம்பரங்கள், பேனர்கள், தட்டிகள், போஸ்டர்கள், வரவேற்பு வளைவுகள், வாகனசெலவுகள், போக்குவரத்து செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கணக்குவைத்து பக்காவாக வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்ல் ஆணையம்உத்தரவிட்டுள்ளது.

இதில் முக்கியமானது, பிரசாரத்திற்குப் போகும்போது பொதுமக்கள்,வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது அந்தத் தட்டில் வேட்பாளர்கள் போடும்பணத்தையும் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்த்துள்ளது தேர்தல் ஆணையம்.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், ஆரத்தித் தட்டில் 100 ரூபா. 500 ரூபாயைஅள்ளிப் போடுவது சாதாரண விஷயம். எனவே இதையும் செலவுக் கணக்கில் சேர்த்துவிட்டது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் இந்தப் புதிய உத்தரவால் காந்தி தாத்தாவை நம்பி களத்தில்இறங்கியுள்ள வேட்பாளர்கள் அரண்டு போயுள்ளனர்.

இது தவிர தெருவில் தாரை தப்பட்டையோடு வரும் வேட்பாளரிடம் குழந்தையைக்கொடுத்து பேர் வைக்கச் சொல்லி தருவார்கள் சில தாய்மார்கள்.

வேட்பாளர்களும் தமிழ்பாண்டி, தமிழ்குழலி என்று தங்கள் தமிழ்ப் பற்றை பெயரில்காட்டிவிட்டு, அப்படியே குழந்தையில் கையில் ஒரு நூறு ரூபாயை திணிப்பர்.

தேர்தல் நேரத்தில் காசுக்கு ஆசைப்பட்டு குழந்தையை வரும் வேட்பாளர்களிடம்எல்லாம் வரிசையாகக் கொடுத்து பெயர் வைப்பது எல்லாம் நம் ஊரில் சாதாரணம்.

ஏற்கனவே பெயரிடப்பட்ட குழந்தைகளையும் வேட்பாளரிடம் தந்து ஒரு பேரையும்ஒரு நோட்டையும் வாங்கிக் கொள்வதில் நம்மவர்கள் கில்லாடிகள்.

இந்த பேர் சூட்டு வைபவத்துக்கு தரப்படும் நோட்டுக்கும் தேர்தல் ஆணையம் கணக்குகேட்டால் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+