நாளையுடன் முடிகிறது வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நாளையுடன்மனுதாக்கல் முடிவடைகிறது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் மே 8ம் தேதி வாக்குப் பதிவுநடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது.முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன்,விஜயகாந்த் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உள்பட இதுவரை 1,359 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். வேட்பு மனுதாக்கல்செய்ய ஒரே ஒரு நாளே இருப்பதால் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள்,சுயேச்சைகள் உள்ளிட்டோர் விறுவிறுப்பாக மனுக்களைத் தாக்கல் செய்துவருகின்றனர்.
நாளை மறுதினம் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கும். மனுக்களை வாபஸ் பெற24ம் தேதி கடைசி நாள். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியலை தேர்தல் ஆணையம்வெளியிடும்.
மே 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. 11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும். அன்றேமுடிவுகள் வெளியாகிவிடும்.












Click it and Unblock the Notifications